திங்கள், 30 ஜூன், 2014

குளத்தின் மீது மண் போட்டு மூடி 11 மாடிகளைக் கட்டிய பில்டர்கள்!

சென்னை: மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் கட்டப்பட்ட இடத்தில் இதற்கு முன்பு குளம் இருந்தது தெரிய வந்துள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 அடுக்குமாடி கட்டம் இடிந்து விழுந்த விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.  இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் கட்டடம் கட்டப்பட்ட இடம் குறித்து நடத்திய ஆய்வில் இது முன்னர் குளமாக இருந்த இடம் என்பது தெரிய வந்துள்ளது. குளத்தில் மணலை போட்டு நிரப்பி கட்டடத்தை கட்டியுள்ளனர். குளம் இருந்த இடத்தில் பெரிய கட்டடங்கள் கட்டமாட்டார்கள். காரணம் அந்த இடத்தில் உள்ள மண் மிகவும் இளகுவாக இருக்கும். மண் எவ்வளவு உறுதியாக இருக்கும் என்றும் கூற முடியாது. அத்தகைய இடங்களில் பெரிய கட்டடங்கள் கட்ட அடித்தளம் வலுவாக அமைக்க வேண்டும். இந்த இடத்தில் 85 அடி ஆழத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 11 மாடி கட்ட அவர்கள் எப்படி அடித்தளம் போட்டார்கள் என்று தெரியவில்லை.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக