செவ்வாய், 10 ஜூன், 2014

கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்த பிரேசிலில் 10 லட்சம் செக்ஸ் தொழிலாளர்கள் ரெடி!

ரியோடி ஜெனிரோ: உலகின் மிகப்பழமையான தொழிலை செய்து கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விப்பதற்காக,பிரேசில் நாட்டில் சுமார் 10 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். வாடிக்கையாளர்களை கவருவதற்காக, ஸ்போக்கன் இங்லீஷ் வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற்றுள்ள பாலியல் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
கால்பந்து ரசிகர்கள் வருகை 20வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை மறுநாள், 12ம்தேதி, தொடங்கி அடுத்த மாதம் 13ம்தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகளை கண்டு ரசிக்க உலகமெங்கும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் தயாராகிவருகிறார்கள்.  ம்ம் கொடுத்து வச்ச பயலுவ ! போலீசுக்காரன் மாமுல் தொல்லை இனி இல்லை ! கொடூர பாலியல் வன்முறைகளை தடுக்க பாலியல் வணிகத்தை சட்ட ரீதியாக்கவேண்டும் . gang ரேப்பில தினம் தினம் போய்க்கினே இருக்கிற மானத்தை விட இதுல ஒன்னும் அதிகம் போயிடாது ~!
அதேபோல லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரேசிலுக்கு நேரடியாக வந்து போட்டிகளை பார்த்து வீரர்களை உற்சாகப்படுத்த பிரயாணப்பட்டுள்ளனர்
சட்டப்பூர்வ அங்கீகாரம் பிரேசிலுக்கு வரும் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக அந்த நாட்டு பாலியல் தொழிலாளர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு தயாராகிவருகிறார்களாம். பிரேசில் நாட்டில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகும். எனவே விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்மணிகளுக்கு கால்பந்து போட்டித்தொடர் என்பது பணம் அறுவடை செய்யும் சீசன்
பிரேசில் நாட்டில் பீலோ ஹோரிசோன்ட் நகரம் உலகின் மதுபார் தலைநகர் என்ற செல்லப்பெயர் கொண்டது. 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட இங்கு 12 ஆயிரம் உணவகங்களும் உள்ளன. உல்லாச விரும்பிகளுக்குதேவையான அனைத்து வசதிகளும் இங்குள்ளன. அதில் மதுவை தவிர்த்து மாதுவும் ஒன்று. இந்த நகரில்தான் அதிகப்படியான செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனராம்
பல நாட்டு ரசிகர்களும் போட்டியை பார்க்க வருவார்கள் என்பதால் மொழிப்பிரச்சினையை தீர்க்க பாலியல் தொழிலாளர்கள் ஆங்கில மொழியை ஸ்போக்கன் இங்லீஷ் வகுப்பு மூலம் படித்து வருகிறார்கள். தேசிய மொழியான போர்த்துகீசத்தை தவிர பிற மொழி தெரியாமல் இருந்தால் பிசினஸ் டல் அடித்துவிடும் என்பதை உணர்ந்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்
கால மாற்றத்துக்கு ஏற்ப தொழிலை நவீனப்படுத்தவும் செக்ஸ் தொழிலாளர்கள் தயங்கவில்லை. வெளிநாட்டு ரசிகர்கள் பணத்தை கையிலெடுத்துக் கொண்டு பிரேசில் வருவது குறைவு என்பதால் கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்ய மிஷின்களை வாங்கி வைத்துள்ளனர் பாலியல் தொழிலாளர்கள். கட்டணத்தை கிரெடிட் கார்டு மூலம் செலுத்திவிட்டு குறிப்பிட்ட நேரத்துக்கு செக்ஸ்சில் ஈடுபடலாமாம்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக