சனி, 17 மே, 2014

தேர்தலில் கடும் சரிவை சந்தித்த இடதுசாரிகள் ! Mr.Mrs.பிரகாஷ் காரத் தம்பதிகளுக்கு சமர்ப்பணம்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் கடும்
பின்னடைவை சந்தித்துள்ளனர். நாடு முழுவதும் வேட்பாளர்களை களமிறங்கிய இடதுசாரிகளால் வெறும் 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கேரளாவில் 6 தொகுதிகளும், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு தொகுதிகளும் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் 24 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தனர். 2009ல் நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, பார்வர்ட்டு பிளாக் ஆகிய கட்சிகள் சேர்ந்து 7 சதவீத வாக்குகள் பெற்றிருந்தன. ஆனால், இந்த முறை அது 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் 5.33ல் இருந்து 3.2 ஆக சரிந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1.43 சதவீதத்தில் இருந்து 0.8 சதவீதமாகவும் குறைந்துள்ளது. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும் பார்வட்டு பிளாக் முறையே 0.3 மற்றும் 0.2 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன. குறிப்பாக 34 ஆண்டுகள் ஆட்சி செய்த மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளுக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.   .maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக