புதன், 28 மே, 2014

Kashmir அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவை ரத்து செய்ய திட்டமா?

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவு வகை செய்கிறது. அந்த பிரிவை நீக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின் கொள்கையாக கருதப்படுகிறது. ஆனால், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், அப்பிரிவை நீக்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் அலுவலக ராஜாங்க மந்திரியாக நேற்று பொறுப்பு ஏற்ற ஜிதேந்திர சிங் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டது. அவர் காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் இருந்து முதல்முறையாக எம்.பி. ஆனவர் ஆவார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது பிரிவின் நிறை, குறைகளை பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த பிரச்சினையை, பா.ஜனதா, தொழில்முறையாக அணுகி வருகிறது. காஷ்மீரில் நிறைய சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தோம். அதில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து சிலரை சம்மதிக்க செய்து விட்டோம். சம்மதிக்காதவர்களை சம்மதிக்க செய்ய முயற்சி நடந்து வருகிறது’’என்று  கூறினார்.
இதற்கிடையே, மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்த கருத்துக்கு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்தால் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் இருக்காது என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா எச்சரித்துள்ளார். ட்விட்டர் இணையதளம் வாயிலாக இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கும், இந்தியாவிற்கும் இருக்கும் ஒரே ஒரு சட்டரீதியான பிணைப்பை அளிப்பது இந்த 370-வது பிரிவு மட்டுமே என்றும் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சட்டப்பிரிவை நீக்கப் போவதாக அறிவித்துள்ளது பொறுப்பற்ற தன்மை என்றும் அவர் தமது ட்விட்டர் இணையதளத்தில் கூறியுள்ளார். இதனிடையே பிரதமர் அலுவலக இணையமைச்சரின் அறிவிப்பிற்கு மக்கள் ஜனநாயக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவது குறித்து ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்த மத்திய அரசு தயாரா என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய இணைஅமைச்சராக ஜிதேந்திர சிங் பதவியேற்ற முதல் நாளே இவ்வாறு பொறுப்பற்ற முறையில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாக இடதுசாரிகள் விமர்சித்துள்ளனர்.

நேற்று காலை பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சராக ஜிதேந்திரசிங் பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் 370வது பிரிவை ரத்து செய்வதற்கான நடைமுறையை தொடங்கிவிட்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
காஷ்மீரின் எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘ஜிதேந்திரசிங் கருத்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு அவரை பா.ஜனதா அடக்கி வைக்க வேண்டும்’ என்று அக்கட்சி கூறியுள்ளது.
இந்நிலையில், தனது கருத்து திரித்து கூறப்பட்டு விட்டதாக ஜிதேந்திரசிங் மறுப்பு தெரிவித்துள்ளார். ‘பிரதமரை மேற்கோள் காட்டி, நான் எதையும் கூறவில்லை, இது முற்றிலும் அடிப்படையற்றது’ என்று அவர் கூறினார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து குறித்த சர்ச்சையில் கஷ்மீர் மாநில முதல் மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்த கருத்து ஏற்று கொள்ள முடியாத ஒன்று ஆர். எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,  உமர் அப்துல்லா கருத்து ஏற்று கொள்ள முடியாத ஒன்று என்று ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி . உமர் அப்துல்லா நினைப்பது போன்று காஷ்மீர் ஒன்றும் பரம்பரை எஸ்டேட் பகுதி அல்ல.  உமரின் கருத்து ஏற்றுகொள்ள முடியாத  ஒன்று’’ என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து,  முதல்வர் உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.  அவர்,  ‘’காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து இல்லையேல், அது இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்காது என்று தான் நான் கூறினேனே தவிர, அப்பகுதி என்னுடைய சொத்து என்று நான் கூறவேயில்லை’’ என்று கூறியுள்ளார்.
மேலும், எனது இந்த கருத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது கண்டனத்துக்கு உரியது. காஷ்மீர் மாநிலத்துக்கு 370வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து குறித்த விவாதத்துக்கு நாங்களும் தயாராகவே உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக