வெள்ளி, 16 மே, 2014

அழகிரி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !திமுக படுதோல்வி அடைந்துள்ளதால்?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், திமுக படுதோல்வி அடைந்துள்ளதால், மதுரையில் திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
சத்யசாய் நகரில் உள்ள அழகிரி வீட்டின் முன் எல்.சி.டி டிவி பெரிய திரையில் வைக்கப்பட்டிருந்தது. அழகிரி ஆதரவாளர்கள் காலையில் வீட்டின் முன் குவிந்தனர். அவர்கள் திமுகவின் தோல்வி குறித்த செய்தியைக் கேட்டு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். அழகிரியைப் புறக்கணித்ததால் திமுக தோல்வியைச் சந்தித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். திமுகவின் படுதோல்வி குறித்து செய்தியாளர்கள் மு.க.அழகிரியிடம் கேட்டனர். அதற்கு அவர், இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை; நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை, அதனால் தோற்கவுமில்லை ஜெயிக்கவுமில்லை!
எங்களிடம் எதுவும் கேட்கவேண்டாம். எனவே பத்திரிகையாளர்கள் செல்லலாம் என்று கூறினார். இருப்பினும், அங்கே கூடியிருந்த அழகிரியின் ஆதரவாளர்கள், திமுக தோல்வியில் அழகிரிக்கு  மகிழ்ச்சி இருந்தாலும், தான் ஆதரவு கொடுத்த மதிமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் பின்னடைவைச் சந்தித்தது குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும், திமுக மூன்றாவது இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தேன். அதற்காக என்ன வேலை பார்த்தீர்கள் என்று கோபமாகவும் கேட்டார் என்று கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக