வியாழன், 15 மே, 2014

புதுப்பெண் ரேகா கொலையில் கைதான காதலனின் வாக்குமூலம்

சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மனைவி ரேகா (25). கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அரும்பாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பணியாற்றி வந்த ரேகா, கடந்த 1–ந் தேதி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும, அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி ஸ்ரீராம் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் 3–ந் தேதி அன்று போரூர் ஏரியில் சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் மிதந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அது மாயமான ரேகாவின் உடல் என்பது தெரியவந்தது. கை கால்களை துண்டு துண்டாக வெட்டி அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
ரேகாவை ஒரு தலையாக காதலித்த மாதவரத்தை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் சாம்சன் இக்கொலையை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவான அவரை பிடிப்பதற்காக உதவி கமிஷனர் செந்தில் குமார், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோரது தலைமையில் தனிப்படைகள் அமைக்கப் பட்டிருந்தது. இத்தனிப்படையினர் கடந்த 2 வாரங்களாக சாம்சனை தேடிவந்தனர். கோவை, ஊட்டி, சேலம் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. கோவையில் பதுங்கி இருந்த சாம்சனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்து அவர் புதுச்சேரிக்கு தப்பினார்.
2 வாரத்திற்கு பின்னர் அவர் சென்னை வந்தார். இதையறிந்த போலீசார் மாதவரத்தில் நேற்று இரவு மடக்கி பிடித்தனர். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
ரேகாவை கொலை செய்தது ஏன் என்பது குறித்து சாம்சன் அளித்துள்ள வாக்குமூலம்:
’’ரேகா முன்பு பி.பி.ஓ. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு ஊழியர்களை ஏற்றி வரும் வேன் டிரைவராக நான் வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கும் ரேகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் நாங்கள் சுற்றி திரிந்தோம். பின்னர் என்னுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். ஸ்ரீராமை காதலி த்து அவரை திருமணம் செய்து கொண்டார். என்னை காதலித்து ஏமாற்றியதால் அவர் மீது ஆத்திரத் தில் இருந்தேன்.
கல்யாணம் முடிந்த பின்னர் 2 மாதம் என்னுடன் ரேகா பேசவில்லை. அதற்பிறகு என்னுடன் பேசி மீண்டும் பழக ஆரம்பித்தார். ஆனால் எனக்கு அவள் மீதான ஆத்திரம் தணியவில்லை. அதனால் அவளை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன்.
சம்பவத்தன்று செல்போனில் பேசி அவரை வரவழைத்தேன். காரில் பீச்சுக்கு அழைத்துச் சென்றேன். அன்று மாலை மாதவரம் பகுதிக்கு சென்றேன். ஆள் இல்லாத இடத்தில் வைத்து காரிலேயே அவளது கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.
பின்னர் மாதவரம் காலி மைதானம் ஒன்றில் வைத்து அவளது கை மற்றும் 2 கால்களை வெட்டி துண்டாக்கினேன். ஏற்கனவே கொண்டு வந்து இருந்த கோணிப் பையில் உடலை மூட்டையாக கட்டி போரூர் ஏரியில் வீசினேன். பின்னர் காரை எனது நண்பர் வீட்டில் விட்டு விட்டு தலைமறைவானேன்’’என்று கூறினார்.
இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் முதலில் காரை கண்டு பிடித்தனர். அதில் இருந்த ரத்தக்கறை, சதை துகள்கள் வைத்து கொலையாளி சாம்சன் என்பதை உறுதிப்படுத்தினார்.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சாம்சனை கைது செய்தனர்.

இந்த வழக்கில் துப்புதுலக்கிய தனிப்படை போலீசாரை கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் கருணா சாகர், இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் மயில்வாகனன் ஆகியோர் பாராட்டினார்கள்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக