செவ்வாய், 6 மே, 2014

மோடி: ராகுலை தொந்தரவு செய்ய வரவில்லை ! அவரு பாவங்க ?

ராகுலை தொந்தரவு செய்ய வரவில்லை. அவர் ஏற்கனவே குழப்பம் நிறைந்த மனதுடனேயே உள்ளார்: மோடி பிரசாரம் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று அங்கு இறுதிகட்ட பிரசாரம் நடைபெற்றது. அமேதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பா.ஜனதா வேட்பாளர் ஸ்மிரிதி இரானியை ஆதரித்து நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த தொகுதியில் போட்டியிடும், ஸ்மிரிதி இரானி யார்? என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் (பிரியங்கா) கேட்டுள்ளார். ஜனநாயகத்தில் இதைப் போன்ற கேள்வியை கேட்க அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு உரிமை இல்லை. இது அகந்தையின் அடையாளம். எப்போது அகந்தை அதிகரிக்கிறதோ, அப்போது மக்கள் தங்கள் புத்தியை இழந்து இதைப் போன்ற கேள்வியை கேட்பார்கள்.


40 ஆண்டுகளாக நீங்கள் பாவம் செய்து வருகிறீர்கள். 3 தலைமுறையினரின் வாழ்க்கை மற்றும் கனவுகளை பாழாக்கி உள்ளீர்கள். எனவே உங்கள் கனவுகளை மாற்றவே நான் வந்துள்ளேன். உங்கள் மனதில் உள்ள வலியை மாற்றவே வந்துள்ளேன். அந்த வகையில் இங்கு நான் பதிலடி கொடுப்பதற்காக வரவில்லை, மாறாக மாற்றத்தை கொண்டு வருவதற்காகவே வந்துள்ளேன். ராகுல் காந்தியை தொந்தரவு செய்ய வரவில்லை. அவர் ஏற்கனவே குழப்பம் நிறைந்த மனதுடனேயே உள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வெற்றி பெற்றுள்ள காந்தி குடும்பத்தினர், இந்த மக்களை கைவிட்டு விட்டனர். இங்குள்ள மக்களுடன் குடும்ப உறவுகள் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இங்கு வளர்ச்சிக்காக எதுவும் அவர்கள் செய்யவில்லை. இவ்வாறு நரேந்திர மோடி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக