திருமலை ஏழுமலையானின் சொத்துகள் முழுவதும், சீமாந்திராவுக்கே
சொந்தம் என, அரசு உத்தரவு விட்டுள்ளது.
; திருமலை ஏழுமலையான் குடிகொண்டுள்ளது சித்தூர் மாவட்டத்தில், அதனால், ஏழுமலையான் சீமாந்திராவை சேர்ந்தவர்.ஆனால், ஜூன் 2ம் தேதி முதல் ஆந்திர மாநிலம், அதிகார பூர்வமாக இரண்டாக பிரிய உள்ளது. இந்நிலையில், இரண்டு மாநிலத்திற்கும், ஆந்திராவில் உள்ள, அனைத்துத்துறைகள் சமமாக பிரிக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்தின் சொத்துக்கள் அனைத்தும், ஏழுமலையானை சேர்ந்தது. மேலும், ஆந்திரா ஒன்றாக இருந்த நிலையில், தேவஸ்தானத்தின் சொத்துகள் தெலுங்கானாவிலும், உள்ளது. அரசு சொத்துகளை மட்டும் தான், இரண்டு மாநிலங்களுக்கு பிரித்தளிக்க முடியும்.
இந்நிலையில், தேவஸ்தானம் ஒரு தனியார் நிறுவனம் மட்டுமல்லாமல், அதனுடைய சொத்துகள் அனைத்தும், பக்தர்கள் நன்கொடையாக வழங்கியவை. அதனால், இந்த சொத்துகள் அனைத்தும் தேவஸ்தானத்தை மட்டுமே சாரும். மேலும், திருமலை ஆந்திர மாநிலத்தில்(சீமாந்திரா) உள்ளதால், இதன் மீது முழு பொறுப்பும் ஆந்திர அரசிற்கு உண்டு. ஆனால், ஏழுமலையான் சொத்துகளை இரண்டு மாநிலங்களுக்கும் பிரிப்பது இயலாத காரியம் என்பதால், இதன் முழு உரிமையை சீமாந்திராவிடம், அரசு அளித்துள்ளது. இதற்கான உத்தரவு, வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதனால் தேவஸ்தானத்திடம் உள்ள சுமார் ரூ 2 லட்சம் கோடிக்கான சொத்து முழுவதும் சீமாந்திராவை சேர்ந்துள்ளது.dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக