சி.பி.ஐ., வழக்கு நிலுவையில் இருப்பதால், பா.ம.க.,வின் அன்புமணிக்கு
அமைச்சர் பதவி அளிக்க பா.ஜ., முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அன்புமணி, ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்தவர் என்பதால், மோடி அமைச்சரவையில் இடம் பெற முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, புதுச்சேரி அனந்தராமன் ஆகியோருடன், டில்லியில் முகாமிட்டிருந்தார்.அமைச்சர் பதவி வேண்டி, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை, பா.ம.க., குழு சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பா.ஜ.க.கூட்டணியின் தமிழக தோல்விக்கு மருத்துவரும் ஒரு காரணம் என, இவர்களை ஒருங்கிணைத்த கூவம் மணியன் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். ஆக சொந்த கூட்டணிக்கே சூனியம் வைத்த டாக்டரின் மகனுக்கு எப்படி மந்திரி பதவி கொடுத்து அழகு பார்ப்பது? பா.ம.க வினரால் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் வெட்டி சாய்த்த இயற்கை வளங்களை மீண்டும் நடுவதற்கு முயற்சி எடுங்கள்.
அப்போது, கேபினட் அமைச்சர் இல்லையென்றாலும், இணை அமைச்சர் பதவியாவது அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால், பா.ம.க.,வின் கோரிக்கையை, பா.ஜ., தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை என, கூறப்படுகிறது. தெலுங்கு சேதம், சிவசேனா, லோக் ஜனசக்தி போன்ற கட்சிகளுக்கு, அமைச்சரவை யில் இடம் அளிக்கும்போது, பா.ம.க.,வுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என, பா.ம.க., தரப்பில் கடுமையாக வலியுறுத்தி இருக்கின்றனர். 'வழக்கில் சிக்கியுள்ளவர்களை, அமைச்சரவையில் சேர்க்க மாட்டோம்' என, லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், 'அன்புமணிக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்க முடியாது; வழக்கு முடிந்த பின் பரிசீலிக்கலாம்' என, பா.ஜ., தலைமை கறாராக, பா.ம.க., கோரிக்கையை நிராகரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்புமணிக்கு அமைச்சர் பதவி அளிக்க, பா.ஜ., மறுத்து விட்டது, ராமதாசுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 'அமைச்சர் பதவி கேட்க வேண்டாம்' என, அன்புமணியிடம், ராமதாஸ் எடுத்துச் சொல்லியும், அவர் அமைச்சர் பதவிக்காக, பா.ஜ., தலைமையை அணுகியதாகவும் சொல்கின்றனர்.
ஏற்கனவே, சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி பதவி வகித்த காலகட்டத்தில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள, மருத்துவக் கல்லூரிக்கு, விதிகளுக்குப் புறம்பாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கொடுத்ததில், பணம் கைமாறியதாக, அன்புமணி, சுகாதாரத் துறை இயக்குனர், பிரிவு அலுவலர், இரு மருத்துவர்கள் உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில், அன்புமணி முன் ஜாமின் பெற்றுள்ளார். இந்த வழக்கை மேற்கோள் காட்டித்தான், அன்புமணிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்காமல் விட்டு விட்டது, மோடி தலைமையிலான பா.ஜ., அரசு.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

விதிகளுக்கு புறம்பாக...:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக