செவ்வாய், 20 மே, 2014

சீமாந்திரா தலைநகர் விஜயவாடா:

சீமாந்திரா மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி
பெற்று ஆட்சியை பிடித்தது. தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு சீமாந்திரா மாநிலத்தின் முதல்–மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.
ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் அங்கு பதவி ஏற்க சந்திரபாபுநாயுடு விரும்புவில்லை. சீமாந்திராவில் உள்ள விஜயவாடாவில் பதவி ஏற்க திட்டமிட்டு உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பதவி ஏற்றதும் குண்டூரில் அமைக்கப்படும் அலுவலகத்தில் முதல்–அமைச்சர் பொறுப்பை கவனிக்க திட்டமிட்டு உள்ளார். இதற்கிடையே சீமாந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்கும் பணியில் மத்திய அரசு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இங்கு குழுவினர் பல்வேறு நகரங்களை பார்வையிட்டது.

தற்போது விஜயவாடாவை மையமாக வைத்து புதிய தலைநகர் உருவாக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
மாநிலத்தின் மைய பகுதியில் விஜயவாடா உள்ளது. அதோடு கிருஷ்ணா நதி ஓடுவதால் தலைநகருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.
மேலும் அரசுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் இங்கு உள்ளது. எனவே அரசு அலுவலகங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி எளிதாக இருக்கும் என கருதப்படுகிறது.
புதிய தலைநகரை டெல்லியை போல் வடிவமைக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு உள்ளார். புறநகர் மாவட்டங்களை இணைத்து டெல்லி தலைநகர் உருவாக்கப்பட்டது. அதே போல் விஜயாவாடாவை சுற்றியுள்ள குண்டூர், தெனாலி, மங்களகிரி ஆகிய மாவட்டங்களை விஜயவாடாவுடன் இணைத்து விஜயவாடாவை மையமாக வைத்து புதிய தலைநகர் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய தலைநகருக்கும் திரிநகரி என பெயரிடவும் பரீசிலனை செய்யப்படுகிறது. கிருஷ்ணா நதியில் 2 மேம்பாலம் கட்டினால் விஜயவாடா அனைத்து பகுதிகளுடன் இணையும் வகையில் சாலை வசதி ஏற்படும் என்று கருதப்படுகிறது. புதிய தலைநகர் அமைவதன் மூலம் சுற்றுவட்டார மாவட்டங்கள் வளர்ச்சி அடையும் என்றும் கருதப்படுகிறது.
ஏற்கனவே சந்திர பாபுநாயுடு ஆந்திரா முதல்–மந்திரியாக இருந்த போதுதான் ஐதராபாத் ஹைடெக் நகரமாக வளர்ச்சி அடைந்தது. ஐதராபாத்தை விட சீமாந்திரா தலைநகர் சிறப்பாக வடிவமைக்க சந்திரபாபுநாயுடு திட்டமிட்டு உள்ளார்..maalaimalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக