நடந்து முடிந்த
தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோவை மக்களவைத்
தொகுதி உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் பல்லடம் ஒன்றிய, நகர பகுதிகளில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பல்லடத்துக்கு
செவ்வாய்க்கிழமை சென்றார்.
பல்லடம் அருகிலுள பணப்பாளையத்தில்
துவங்கிய நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தில் எம்.பி. நாகராஜன், மேயர்
செ.ம.வேலுசாமி, பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம் மற்றும் கட்சி நிர்வாகிகள்
தங்களின் வாகனங்களில் சென்றனர்.அப்போது,
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றும்,
பல்லடம் அருகிலுள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் வசித்துவரும் சந்திரசேகரன்
(வயது-30) என்பவர் பல்லடம்-திருப்பூர் சாலையிலுள்ள வெட்டுபட்டான்குட்டை
என்ற இடத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது சிவப்பு சுழல் விளக்குப்
பொருத்திய வி.ஐ.பி. வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். சந்திரசேகரன் மீது
மோதிய கார் விபத்து நடந்ததை தெரிந்தும், அங்கே நிற்காமல் சென்றுவிட்டது.
சாலையில் அடிபடுக்கிடந்த
சந்திரசேகரனை அக்கம் பக்கமிருந்தவர்கள் மீட்டு பல்லடம் மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். அங்கே அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு,
கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பல்லடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், சந்திரசேகரன் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது கோவை மேயர் செ.மா.வேலுசாமியின் கார் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட போலீசார் தங்களது விசாரணை அறிக்கையை சென்னைக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து பல்லடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், சந்திரசேகரன் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது கோவை மேயர் செ.மா.வேலுசாமியின் கார் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட போலீசார் தங்களது விசாரணை அறிக்கையை சென்னைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த
நாடாளமன்ற தேர்தலில் கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் நாகராஜனுடன், மாவட்ட
செயலாளரான செ.ம.வேலுசாமி இனைந்து வேலை செய்யமால் போனதால், மாநகராட்சி
எல்லையில், அதிமுகவை விட பாரதீய ஜனதா கட்சி கூடுதல் வாக்குகளை பெற்றது என்ற
புகாரும் மேலிடத்துக்கு சென்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக
செவ்வாய்க்கிழமை இரவு மேயர் செ.ம.வேலுசாமி, மாநகர் மாவட்டச் செயலர்
பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதே நேரத்தில், பலல்டம் அருகே மேயரின்
கார் மோதிவிட்டு நிற்காமல் சென்ற தகவல் சென்னைக்குச் சென்றதை அடுத்து,
மேயர் பொறுப்பிலிருந்து விலகுமாறும் அதிமுக மேலிடத்தில் இருந்து அவருக்கு
உத்தரவு வந்ததாகக் தெரிகிறது. இதையடுத்து, தான் வகித்து வந்த மேயர்
பதவியையும் செ.ம.வேலுசாமி இராஜினாமா செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நேற்று
மேயரின் கார் பறிமுதல் செய்யப்பட்டு பல்லடம் காவல் நிலையத்துக்கு கொண்டு
வரப்பட்டது. இது குறித்து, பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து கார்
ஓட்டுநர் கனகராஜை (புதன்கிழமை) கைது செய்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக