திங்கள், 5 மே, 2014

நடிகர் ஆமீர் வாக்கை காப்பாற்றாததால் மலை மனிதரின் மருமகள் மரணம் ! தனி ஆளாக மலையை குடைந்து பாதை அமைத்தவரின் குடும்பம்


பாட்னா: பீகாரின் மலை மனிதர் என்று அழைக்கப்படும் தசரத் மான்ஜியின் மருமகள் பசந்தி பாலிவுட் நடிகர் ஆமீர் கான் வாக்குறுதி அளித்தது போன்று பணம் கொடுக்காததால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் இறந்தார். மலையில் பாதை அமைக்க தனி ஆளாக மலையை குடைந்தவர் பீகாரைச் சேர்ந்த தசரத் மான்ஜி. அதனால் அவர் மலை மனிதர் என்று அழைக்கப்படுகிறார். அவரது மகன் பகிரதின் மனைவி பசந்தி தேவி போதிய மருத்துவ வசதி இன்றி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார்.  இது குறித்து பகிரத் கூறுகையில், ஹீரோ ஆமீர் கான் அவர் வாக்குறுதி அளித்தது போன்று பணம் கொடுத்திருந்தால் என் மனைவி இறந்திருக்க மாட்டார். என் மனைவி எங்களின் ஏழ்மையால் இறந்தார். அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குறுதி அளிப்பதோடு நிறுத்திக் கொள்வது போன்று ஆமீரும் செய்துள்ளார். புத்தகயாவைச் சேர்ந்த பீபிள் பர்ஸ்ட் கல்வி அறக்கட்டளை அளித்த பணத்தை வைத்து என் மனைவியின் இறுதிச் சடங்குகளை செய்தோம். அதை செய்யக் கூட என்னிடம் பணம் இல்லை என்றார். கடந்த பிப்ரவரி மாதம் ஆமீர் தான் நடத்தும் டிவி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதேவுக்காக தசரத்தின் கிராமத்திற்கு சென்றவர் பசந்தி மற்றும் பகிரதுக்கு நிதி உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக