வியாழன், 1 மே, 2014

வரிசையை மீறிய சிரஞ்சீவி; தடுத்த வாக்காளர் ! அவந்தாண்டா உண்மையான ஹீரோ !

சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் என்.ஆர்.ஐ. வாக்காளர்.சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் என்.ஆர்.ஐ. வாக்காளர்.
ஆந்திரப்பிரதேச மாநிலம் ஹைதராபாதில் வாக்களிப்பதற்காக வந்த மத்திய அமைச்சரும், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவருமான சிரஞ்சீவி தனது குடும்பத்தாருடன் வரிசையில் செல்லாமல் நேரடியாக வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றபோது அவர்களை ஒரு வாக்காளர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 25 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து சிரஞ்சீவியும் அவரது மகள் சுஷ்மிதாவும் வாக்களித்துச் சென்றனர்.
தெலங்கானா பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தாருடன் வாக்களிக்க வந்தார் சிரஞ்சீவி. அப்போது, வாக்காளர்களின் வரிசை மிக நீண்டதாக இருந்ததால், சிரஞ்சீவி, அவரது மனைவி, மகள் சுஷ்மிதா, மகனும் தெலுங்குப் பட ஹீரோவுமான ராம்சரண் தேஜ் ஆகியோர் வரிசையில் காத்திருந்தவர்களை முந்திக் கொண்டு நேரடியாக வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை ராஜா கார்த்தி காந்தா என்ற வாக்காளர் தடுத்து நிறுத்தினார். ஜனநாயகத்துக்கு சிரஞ்சீவி ஒரு வில்லன் நிஜமான ஹீரோ அல்ல , 

வி.ஐ.பி. அந்தஸ்தைக் காட்டி யாரும் வரிசையில் முந்திச் செல்லக் கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சுமார் 25 நிமிடங்கள் காத்திருந்து சிரஞ்சீவியும், மகள் சுஷ்மிதாவும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக