ஞாயிறு, 4 மே, 2014

பாலின சர்ச்சையால் பதக்கம் இழந்த சாந்தி தேசிய விளையாட்டு அகாடமி பயிற்சியாளராகிறார்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த
கத்தக்குறிச்சியைச் சேர்ந்தவர் சாந்தி(33). ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இருப்பினும் பாலின சர்ச்சை காரணமாக இவரிடம் பதக்கம் பறிக்கப்பட்டது. கிடைக்க வேண்டிய பயிற்சியாளர் பணியும் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது. சாந்தி செங்கல் சூளையில் வேலை செய்து பெற்றோரைக் காப்பாற்ற வேண்டிய நிலை நீடித்தது.


பெங்களூர் தடகளப் பயிற்சியாளர் படிப்பை முடித்துள்ள இவர், பயிற்சி முடித்து திரும்பிய சாந்தி மயிலாடுதுறையில் உள்ள சாய் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில்  அப்ரண்டிஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் கூறியதாவது: மிகுந்த சிரமங்கள், சிக்கல்களுக்கிடையே பெங்களூரில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் படிக்க வாய்ப்புக் கிடைத் தது. எனது படிப்புச் செலவு ஸீ65 ஆயிரம் மற்றும் விடுதிச்செலவு உட்பட அனைத்தையும் மத்திய அரசே ஏற்றுக் கொண்டது. கடும் பயிற்சி மேற்கொண்டேன். பயிற்சியை முடித்து சான்றிதழும் பெற்றிருக்கிறேன். டைரக்டர் ஜெனரல் தாம்சன் விரைவில் பயிற்சியாளர் பணியில் நியமிப்பதாகச் சொல்லியிருக்கிறார். மத்திய அமைச்சர் அஜய்மாக்கனும் உறுதியளித்திருக்கிறார். எனவே விரைவில் தேசிய விளையாட்டு அகடமியில்(சாய்) பயிற்சியாளராக பணியில் சேர்ந்து விடுவேன். எனது முழு கவனமும் கனவும் உலக அளவில் இந்தியாவிற்கு பதக்கங்கள் வாங்கிக் குவிக்க வேண்டும் என்பதே. பணியில் சேர இரண்டு மாதங்களாகும்.இவ்வாறு சாந்தி கூறினார்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக