செவ்வாய், 27 மே, 2014

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி புறக்கணிப்படுவதாக ஆதரவாளர்கள் போர்க்கொடி ! ஆஹா நன்னாருக்கு பேஷா பண்ணுங்கோ !

டெல்லி: பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர்
ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு பதவி ஏதும் வழங்கப்படாததால் அவர்களது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக கருதப்படும் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி உள்ளிட்டோரும் பதவி ஏற்றனர். ஆனால் கட்சியின் மூத்த மற்றும் முன்னணி தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு பதவிகள் உண்டா இல்லையா என்ற தகவலே இல்லையென அவர்களது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மரியாதைக்குரிய முக்கியப் பதவிகள் வழங்கப்படும் என்று மோடி தெரிவித்திருந்தாலும், அதற்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதாண்டா ஆர் எஸ் எஸ் பாணி  ஒட்டகத்துக்கு இடம் கொடுத்துவிட்டு குத்து குடையுதுனா?
அத்வானி சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்துவிட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முரளி மனோகர் ஜோஷி வயது மூப்பு அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது மோடி அமைச்சரவையில் இடம்பெறுபவர்களின் வயது அதிகபட்சம் 75 ஆக தீர்மானிக்கப்பட்டதாகவும், அதே போல கட்சியின் மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு பதவி வழங்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனடிப்படையிலேயே முரளி மனோகர் ஜோஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே சுஷ்மாவிற்கு வெளியுறவுதுறை ஒதுக்கப்பட்டதன் மூலம், அமைச்சரவையில் அவருக்கு 3வது இடம் வழங்கப்பட்டதாலும், அருண் ஜேட்லிக்கு இரு முக்கிய இலாக்காக்களை ஒதுக்கியிருப்பதன் மூலம் சுஷ்மாவின் மதிப்பும், அதிகாரமும் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அவரது ஆதராளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நிதிஅமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என்று கருதப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவும் ஓரம்கட்டப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக