திங்கள், 19 மே, 2014

தி.மு.க., கோட்டையை அசைத்த அதிகார மையம் !

ஊட்டி:கோடநாடு எஸ்டேட் பங்களாவை, அதிகார மையமாக வைத்து, ஜெயலலிதா வகுத்த தேர்தல் வியூகம், தி.மு.க.,வின் கோட்டையான நீலகிரியை அசைத்து பார்த்துள்ளது. இது, தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டசபை தொகுதிகள், தி.மு.க.,வின் செல்வாக்கு மிகுந்த தொகுதிகள். மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகியவை அ.தி.மு.க., செல்வாக்கு பெற்ற தொகுதிகள். இந்த அடிப்படையில் தான், அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து வந்தன.அதிகார மையமான கோடநாடு<முதல்வர் ஜெ., கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்தபடியே நீலகிரி லோக்சபா தொகுதியை தக்க வைக்க, பல்வேறு வியூகங்களை வகுத்தார். எத்தனை வியூகம் அமைத்தாலும் திருமங்கலம் பார்முலா + 144 உபயோகப்படுத்தியதால்த்தான் வெற்றி என்று என்னும் நிலை உள்ளது. வெற்றிக்கு உதவிய ஒரு முக்கிய புள்ளிக்கு இன்னோவா இலவசமாக வழங்கியதாக வத்திகள் உலா வருவதும் அதை உறுதி செய்கின்றன...என்னதான் முயற்சி செய்தாலும் பிரதமர் பதவி கை நழுவிப்போனதில் அம்மாவுக்கு பெரிய ஏமாற்றம்தான்..
37 ஆண்டுகளுக்கு பின், அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.,வில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. மாவட்டத்தில், அதிகளவில் வாழும் படுகர் இன மக்கள் தான், வெற்றியை நிர்ணயம் செய்கின்றனர், என்ற 'கணக்கு' ஒரு புறமிருக்க, அனைத்து தரப்பினரின் செல்வாக்கையும் பெற, அ.தி.மு.க., காய் நகர்த்தியது.தி.மு.க.,வின் ஓட்டு வங்கிகள் என கருதப்படும், தோட்ட தொழிலாளர்கள், தாயகம் திரும்பிய தமிழர்கள், தலித் இன மக்களின் ஓட்டுக்களை திருப்ப, அ.தி.மு.க., மாவட்ட செயலர் பதவியை சாதாரண ஊராட்சி தலைவராக இருந்த கலைச்செல்வனுக்கு வழங்கினார் ஜெ., தேர்தல் நெருங்கும் சமயத்தில், தமிழ்நாடு ஆதி திராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) தலைவர் பதவியையும் வழங்கினார். நகர, பேரூராட்சிப் பகுதிகளில் 10 வார்டுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்படையில், கட்சி பணி பகிர்ந்தளிக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கையை அதிகரிக்க வியூகம் வகுக்கப்பட்டது. இந்த வியூகத்தால், 13 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலை பெற்று, தி.மு.க.,வின் கோட்டையை அசைத்து பார்த்து விட்டது அ.தி.மு.க.,இதுதான் கணக்கு!>2009 தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ராஜா, 86 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்; இதில், ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டசபை தொகுதிகளில் இருந்து மட்டும், 70 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக கிடைத்தன. இத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 940 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதில், நீலகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதியில் இருந்து 13 ஆயிரத்து 684 ஓட்டுகள், தி.மு.க., வேட்பாளரை விட கூடுதலாக கிடைத்துள்ளன. மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் தொகுதிகளில் இருந்து 91 ஆயிரத்து 256 ஓட்டுகள் கூடுதலாக கிடைத்துள்ளன.தி.மு.க.,வின் கோட்டை லேசாக ஆட்டம் கண்டுள்ளதால், அக்கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதே வேளையில், கூடலூரில் அ.தி.மு.க.,வினர் இரவு, பகலாக பல 'சிறப்பு' பணிகளை செய்தபோதும், அங்கு அ.தி.மு.க.,வை விட, தி.மு.க., கூடுதல் ஓட்டுகளை வாங்கியிருப்பதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக