வெள்ளி, 2 மே, 2014

வாரணாசியில் விஸ்வரூபம் எடுத்த அர்விந்த் கேஜ்ரிவால் !


மோடிக்கு பெருந்தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்

வாரணாசி, ஏப். 30- மோடி வாரணாசி தொகுதியில் நிற்கப்போகிறேன் என் றதும் கெஜ்ரிவால் அவரை எதிர்த்து நிற்கிறேன் என்று அறிக்கை விட்டார். அறிக்கை விட்டதும் இல்லாமல், டில்லி தேர்தல் முடிந்த கையோடு தனது பரி வாரங்களோடு வாரணாசி சென்றுவிட் டார். நாடு முழுவதும் பல தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டாலும், போட்டியிடும் பெரும்பாலானோர் பிரபலமாக இருப்பதால் கெஜ்ரிவால் வந்து பிரச்சாரம் செய்யவேண்டாம்; நீங்கள் வாரணாசியில் இருந்து முழுவது மாக மோடிக்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என்று அனை வரும் கூறிவிட, கெஜ்ரிவால் எந்த ஒரு தயக்கமும் இன்றி முழுமையாக பிரச் சாரத்தில் இறங்கிவிட்டார். 
இதுவரை 13 ஜனசபா என்ற மக்கள் அரங்க உரையை நிகழ்த்தியுள்ளார், இங்கு மக்கள் கேள்வி கேட்க இவர் பதில் அளிப்பார்.  இந்த 13 ஜனசபா மாத்திரமில்லாமல் பல்வேறு சாலைப் பிரச்சாரம் (ரோட் ஷோ) நடத்தியுள்ளார். இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் லட்சக்கணக்கானோர் பங்குகொண்டனர். இந்தச் செய்தி யாருக்குப் பயம் உண்டாக்குகிறதோ, இல்லையோ- பாஜகவிற்கு பெரும் கிலியை உண்டாக்கிவிட்டது. காரணம் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மிகவும் பிற்படுத்தபட்டவர் கள் இவர்களின் ஓட்டுக்கள் தான் வெற் றியைத் தீர்மானிக்கும். இதுநாள்வரை நடந்த தேர்தல்களில் சரியான எதிரி வேட்பாளர் நிறுத்தப்படாததின் காரண மாகத்தான் சொற்ப வாக்குகளில் முரளி மனோகர் ஜோஷி வெற்றிபெற்று வந்தார். ஜோஷிக்குப் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை    முரளிமனோகர் ஜோஷி பெற்ற வாக்குகளின் விழுக்காடு ஒன்றும் மிகப்பெரிய அளவில் இல்லை.
இம்முறை காங்கிரசும் நேரிடையாக இல்லாமல், மறைமுகமாக கெஜ்ரி வாலை ஆதரிப்பதுபோல் தொகுதிக்கு அதிகமாக அறிமுகமில்லாத வேட் பாளரை நிறுத்தியுள்ளது. மேலும் காங் கிரசின் பிரபல தலைவர்கள் யாரும் வாரணாசிக்கு சென்று பிரச்சாரம் செய்யவில்லை. ஆகையால் காங்கிரஸ் பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக் கும் என்று சொல்லமுடியாது.  இந்த நிலையில் வெற்றிக்குக் காரண மான அனைத்து வாக்குகளும் கெஜ்ரி வாலுக்குச் செல்லும் சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில் வாரணாசி மக்களிடம் பாஜக கொஞ்சம் அதிக மாகவே கெட்டபெயர் வாங்கிக் கொண்டு வருகிறது, கெஜ்ரிவாலுக்கு ஆதரவானவர்களைத் தாக்குவது, பேனர்களை கிழிப்பது, பொது இடங் களில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அசிங்க மான சொற்களை உபயோகப்படுத்துவது போன்றவைகளால் வாரணாசி மக்களி டையே பாஜகமீது வெறுப்பு ஏற் பட்டுள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதுபோல் கெஜ்ரிவால் தன்னை, யாரும் தரக்குறைவாகப் பேசினால் அவர்களுக்கு பூச்செண்டு களைப் பரிசாக அளியுங்கள் என்று கூற, வாரணாசியில் பல இடங்களில் பூச் செண்டுகளின் வியாபாரம் பெருகியுள் ளது.   அதாவது பாஜகவினருக்கு எதிரான நிலை மக்களிடையே உருவாகி விட்டது. இன்னும்  தேர்தலுக்கு சில நாள்களே இருக்கும் பட்சத்தில் கெஜ்ரிவாலின் ரோட் ஷோ மிகவும் பிரபலமாகி வருவ தால், தங்களுக்கு விழும் வெற்றிக்கான வாக்குகளை கெஜ்ரிவால் பறித்துவிடு வாரோ என பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது.  இறுதியாக மோடி ஒருமுறை வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வாரணாசி பாஜக பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.  மே 12 ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் வாரணாசியில் நடைபெற உள்ளதால் மோடி எப்படியும் இரண்டு முறையாவது வாரணாசியில் பிரச்சாரம் செய்யவேண்டும் என்றும், அதற்கு முன்பு கெஜ்ரிவாலில் பிரச்சாரத்தில் குழப்பம் உண்டாக்கிவிடவேண்டும் என்றும் வாரணாசி பாஜக பிரமுகர்கள் முடிவு செய்துள்ளனர்.  மோடியின் ஊர்வலத்தில் உள்ளூர் மக்கள் இல்லை  கடந்த 24 ஆம் தேதி மோடி தனது வேட்பு மனு தாக்கலின் போது பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்திக் காண் பித்தார்.  இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வாரணாசி மக்கள் பலர் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில் இந்தியா வெங்கும் பலரை கொண்டுவந்து இறக்கியுள்ளனர்.  முக்கியமாக மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற பாஜக ஆட்சியாளும் மாநிலத்தில் இருந்து பெருவாரியான மக்கள் ரயில் மூலம் வாரணாசி வந்து இறங்கியுள்ளனர். ஊர்வலத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இது குறித்து வாரணாசிப்பதிப்பான ஹிந்துஸ்தான் என்ற இந்தி நாளிதழில் மோடியின் வேட்பு மனுத்தாக்கலுக்கு முதல் நாள் வாரணாசி ரயில் நிலையம் கும்பமேளாவிற்கு வரும் கூட்டம் போல் நிறைந்துவிட்டது,  நாடு முழுவதிலும் இருந்து பல ரயில்களில் பாஜக கட்சி யினர் வந்துகொண்டு இருந்தனர்.   வாரணாசி மக்கள் மோடியின் ஊர்வலத்திற்கு ஆதரவு அளிக்க வில்லை என்பது வாரணாசி ரயில் நிலையத்தில் வந்திரங்கிய பாஜகவி னரைப் பார்த்தாலே தெரியும் என்று எழுதியுள்ளது.
(ஹிந்துஸ்தான் இந்தி நாளிதழ், வாரணாசி)
viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக