வியாழன், 8 மே, 2014

முன்னாள் பிரதமர்களுக்கு இலவச மின்சாரம் ! மறுவாழ்வு அளிக்கவும் தீர்மானம் ?

பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் வேறு வீட்டுக்கு செல்ல
திட்டமிட்டுள்ளார். பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறும் அவர் மோதிலால் நேரு மார்க்கில் உள்ள ஷீலாதீட்சித் வீட்டில் தங்க உள்ளார். தற்போது அந்த வீடு சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தனது வீட்டின் மின்சாரம் மற்றும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டியது வராது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர்களுக்கு இந்த கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இதற்காக அரசின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் மன்மோகன்சிங் இலவச மின்சாரம் சலுகையை பெறுகிறார்

முன்னாள் பிரதமர்களில் தற்போது வாஜ்பாய், தேவே கவுடா ஆகியவர்களுக்கும் இந்த இலவச மின்சார சேவை கிடைக்கும்.
இதுபற்றி மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "இந்த சட்ட திருத்தத்தால் நாட்டுக்கு பெரிய இழப்பு எதுவும் வராது. டெல்லியில் அரசு வீட்டில் இருக்கும் வரை இந்த சலுகைகளை முன்னாள் பிரதமர்கள் அனுபவித்து கொள்ளலாம்" என்றனர்      இனி நாம் சீக்கிரமே வல்லரசாகிடுவோம்ல ?

maalaimalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக