சனி, 17 மே, 2014

தி.மு.க.,வுக்கு பூஜ்ஜியம்; உட்கட்சி பூசல்? அதிர்ச்சியில் கட்சி !

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததாலும், கட்சிக்கு வழக்கமாக வரும் வாக்கு சதவீதம் குறைந்து விட்டதாலும், தி.மு.க., கடும் அதிர்ச்சியில் உள்ளது. கடந்த, 2009ல் கிடைத்த வெற்றியை போல் இல்லாவிட்டாலும், 'திருவிளையாடல்' படத்தில், நாகேஷ், 'எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு தகுந்தபடி, பரிசில் குறைத்துக் கொள்ளுங்களேன்' என்று சொல்வதை போல, 'பிழைக்கு ஏற்ப ஒரு சில தொகுதிகளை கழித்துக் கொண்டு, 10-12 தொகுதிகளிலாவது வெற்றி கிடைக்கும்' என, தி.மு.க.,வினர் எண்ணி இருந்தனர்.ஆனால், ஒரு தொகுதி கூட கிடைக்காததால், தோல்வியின் காரணம் குறித்து, அக்கட்சியினரால் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு, விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பிரதானமாக முன்வைக்கப்படும் வாதங்கள்:< தி.மு.க., மீதான கோபம் கடந்த தி.மு.க., ஆட்சியில், அந்த கட்சியின் மாவட்ட செயலர்கள் சிலர் மீது எழுந்த நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து புகார்கள் மற்றும் அராஜகம் தொடர்பான கோபம், மக்களிடம் இன்னும் நீடிக்கிறது. அதே போல், குடும்ப அரசியல் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தி.மு.க., ஒரு குடும்பத்திற்காக மட்டும் செயல்படும் கட்சி என்ற எண்ணம், மக்கள் மனதில் இருந்து இன்னும் அகலவில்லை. தேர்தலுக்கு முன் வெடித்த அழகிரி விவகாரம் அதற்கு துாபம் போட்டது. கூட்டணி குறித்த முடிவு சரியில்லை முறை மத்திய அமைச்சரவையில் கோலோச்சியது. ஆனால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியை உதறிவிட்டு, ஜாதி மற்றும் மதம் சார்ந்த கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைத்தது உதவவில்லை. காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டும் என, இரண்டாம் மட்ட தலைவர்கள் மற்றும் அழகிரி, கனிமொழி போன்றவர்கள் வலியுறுத்தினர். ஆனால், ஸ்டாலின் பிடிவாதமாக, 'காங்கிரஸ் கூட்டணியே வேண்டாம்' என, தன்னிச்சையாக முடிவு எடுத்தார். மேலும், பா.ஜ., தரப்பில் கூட்டணிக்கு அணுகிய கட்சியினர் சிலருக்கும் தடை போட்டார். வேட்பாளர் தேர்வில் குளறுபடி இதில் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும் தான் முழுக்க முழுக்க முடிவெடுத்தனர். தகுதி படைத்தவர்களை தேர்வு செய்யவில்லை. கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களும் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றனர். பணம் படைத்தவர்களுக்கு, 'சீட்' வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது.ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரை, தஞ்சாவூர் தொகுதிக்கும், அரக்கோணத்தில் வெற்றி பெற்றிருந்த ஜகத்ரட்சகனை, ஸ்ரீபெரும்புதுாருக்கும், வட சென்னையில் வெற்றி பெற்றிருந்த டி.கே.எஸ். இளங்கோவனை, தென் சென்னைக்கும் என, தொகுதி விட்டு தொகுதி மாறி போட்டியிட வைத்ததும் தொகுதி மக்களிடம் அதிருப்தி ஏற்படுத்தியது.


தேசிய பார்வை இல்லாமல் போனது
> லோக்சபா தேர்தலுக்கு, பிரதமராக யாரையாவது முன்னிறுத்தி பிரசாரம் செய்வது அவசியம். அப்படி இல்லாவிட்டால் ஒரு பிரதான அணியை ஆதரித்தாவது பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால், 'மூன்றாவது அணியை ஆதரிப்போம்' என்று கூட, தி.மு.க.,வால் கூற முடியவில்லை. உட்கட்சி பூசல் < உட்கட்சி தேர்தல் ஒருதலைபட்சமாக நடந்ததால், அதில் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள், கட்சிக்கு ஆதரவாக, தேர்தல் பணிகளில் முழு மனதுடன் பணியாற்றாமல் ஒதுங்கியது, கட்சியின் ஓட்டு சதவீதம் குறைந்ததற்கு ஒரு காரணம். மேலும், கட்சியில் தேர்தல் நிதி வசூலிக்கப்பட்டும், தேர்தல் செலவுக்கு கட்சியிலிருந்து பெரிய அளவில் பணம் வழங்கவில்லை. இதனால், கட்சியினரும், தேர்தல் பணியில் ஆர்வம் காட்டவில்லை. புதிய வாக்காளர்களை ஈர்க்க முயற்சி இல்லை கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டாலின் இளைஞரணி தலைவராக இருந்தாலும், இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவருவதற்கான எந்த முயற்சியும், தி.மு.க.,வில் எடுக்கப்படவில்லை. இதனால், தி.மு.க., வாக்காளர்களாக இருந்து, 'புறப்பட்ட' பெருசுகளின் இடத்தில் புதிய வாக்காளர்கள் இல்லாமல் போனர். இதுவும் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு ஒரு காரணம்.இவ்வாறு தி.மு.க.,வினர் வாதாடுகின்றனர்மொத்தத்தில், 1991ல் ராஜிவ் கொலையை அடுத்து தி.மு.க., எந்த தொகுதியிலும் ஜெயிக்காத நிலை, தற்போதும் உருவாகி உள்ளது. இதனால், கட்சியின் அடுத்த தலைவராக முன்னிறுத்தப்படும் ஸ்டாலினுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அதில் இருந்து தாமும் மீண்டு, கட்சியையும் மீட்டெடுக்க, அவர் என்ன செய்ய போகிறார் என்பது தான், தி.மு.க.,வில் தற்போது பேச்சாக உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக