வெள்ளி, 30 மே, 2014

பெண்களின் பெயரை புனைபெயராக கொண்டிருக்கும் ஆண்கள்

sujathat;இலக்கியத் தரம், முற்போக்கு, பெண்ணியம் என்றெல்லாம் மூச்சு முட்ட பேசுகிறவர்கள்;
‘சுஜாதா’ என்கிற கழிசடை பேரில் விருது கொடுத்தால், முண்டியடித்து முன்னால போய் நிற்கிறார்கள்.
பாவம் அந்த அம்மா.. இந்த ஆளு அசிங்க அசிங்க எழுதுனதுக்கு.. அந்த அம்மாவுக்கு தண்டனை. திட்டுறவுங்கெல்லாம் அந்த ஆள திட்டமுடியாமா, அந்த அம்மாவையே திட்ட வேண்டியதா இருக்கு.
‘சுஜாதா’ என்று தன் மனைவியின் பெயரில் பொறுப்பற்று பெண்களுக்கு எதிராகவும் பொறுக்கித்தனமாகவும் எழுதியது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்.
‘தன் பெயரால் எழுதப்படுகிற எந்த மோசமான விசயமும் தனக்குத் தெரியாது’ என்கிற நிலை, ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பெரிய அவமானம். அவலம்.
பொதுவாக பெண்கள் பெயரில் எழுதுகிற ஆண்கள், பாலியல் உறவுக் குறித்து அதிகம் எழுதுகிறார்கள். காரணம், சீக்கிரத்தில் பிரபலமாகலாம் என்பதினாலேயே.
செக்ஸ் சம்பந்தமாக ஒரு ஆண் எழுதுவதை விட, ஒரு பெண் எழுதுவதை தான் ஆண்கள் அதிகம் விரும்புவார்கள்.
‘ஒரு பெண் இப்படியெல்லாம் எழுதுகிறாள்’ என்கிற எண்ணம் ஒரு ஆணை கூடுதலாக கிளர்ச்சி அடைய வைக்கும். அதனால்தான் தொலைக்காட்சியில் பாலியல் சந்தேகங்கள் நிகழ்ச்சியல் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
இரண்டு ஆண்கள் மட்டும் அதை பேசினால் அதைப் பார்ப்பதற்கு ஆளே இருக்காது.
வாசகர்கள் சார்பாக பெண், கூச்சமில்லாமல் சந்தேகம் கேட்கிறார் என்பதே அந்த நிகழ்ச்சியின் வரவேற்புக்குக் காரணம்.
விஜய் டி.வி. காலத்திலிருந்து கேப்டன் டி.வி காலம் வரை.. ஆண்களின் அந்த அற்ப ஆசையின் மூலமாக காசு பார்ப்பதற்கும் உடனடியாக பிரபலமாவதற்கும் எழுத்தாள ஆண்களுக்கும் பெண்கள் பெயர் பெரிதும் உதவுகிறது.
அதனால் தான் சரோஜாதேவி, சுஜாதா, புஷ்பா தங்கதுரை, ஹேமா ஆனந்ததீர்த்தன், சாருநிவேதிதா. /mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக