திங்கள், 26 மே, 2014

காய்ன்ஸ் வைத்து நீர்மட்டம் பார்க்கும் சென்னிமலை இளைஞர்

சென்னிமலை அருகே உள்ள செலமகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர்
ராஜா (32). இவர் நிலத்தடி நீர் மட்டம் பார்த்து சொல்வாராம். கடந்த 18 ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் பார்த்து சொல்லும் இவர் இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிலத்தடி நீர் மட்ட பாயிண்டுகளை பார்த்து சொல்லி அவை போர்வெல் போடப்பட்டு அதிக அளவில் தண்ணீர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடும் வறட்சியான வெள்ளகோவில், தாராபுரம் பகுதியியில் அரசு அதிகாரிகளும் ராஜாவை அழைத்து நிலத்தடி நீர் மட்டம் பார்த்து போர்வெல் போட்டுள்ளனர்.

தனது உறவினர் ஒருவரின் தோட்டத்தில் ராஜா சொன்னதை வைத்து போர்வெல் போட்டார். அதில் அதிக அளவில் தண்ணீர் வந்தது அது முதல் ராஜா பற்றி தெரிய தொடங்கியது.
ஆரம்பத்தில் ராஜா நீர் ஊற்று பார்க்க கட்டணம் ஏதும் வாங்குவது இல்லை ஆனால் தற்போது நீர் ஊற்று பார்க்க ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வாங்குகிறார். தண்ணீர் இல்லை எனில் கட்டணத்தை திருப்பி கொடுத்து விடுவேன் என ராஜா கூறி உள்ளார்.
தண்ணீர் கஷ்டம் உள்ள கிராமங்களுக்கு போர் போடுவதற்கு கட்டணம் இல்லாமல் நீர் மட்டம் பார்ப்பேன் என்றும் ராஜா கூறினார் maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக