சனி, 10 மே, 2014

சுப்பிரமணியசுவாமி : மோடிக்கு பிராமணருக்குரிய குணநலன்கள் இருப்பதால் மோடி இனி பிராமணர் !

பா ஜ க என்றால் பார்பன ஜனதா கட்சி என்பதற்கு சரியான  ஒப்புதல் வாக்குமூலம் இதுவாகும் , பார்பான்  பார்பாந்தாண்டா !
சென்னை: பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடியை பிராமணராக 'நியமிக்கிறேன்' என்று அக்கட்சியில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர். அதையே அவர் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஜனதா கட்சியை கலைத்துவிட்டு சமீபத்தில் பாஜகவில் இணைந்த சுப்பிரமணியசுவாமி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:' 'நமோ' இனிமேல் 'பிராமணர்'.. சு. சுவாமி 'அப்பாயிண்ட்மென்ட்'! "எனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நான் 'நமோ'வை (நரேந்திரமோடி) பிராமணராக நியமிக்கிறேன். அவருக்கு பிராமணருக்குறிய குணநலன்கள் இருப்பதால் இதைச் செய்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அவரை பாலோ செய்பவர்கள் சிலர் பாராட்டியும், சிலர் விமர்சனம் செய்து கீச்சுக்களை வெளியிட்டுள்ளனர். டுவிட்டர் மோதல் உச்சகட்டமாகிய நிலையில், மோசமான வார்த்தைகளில் சிலர் டுவிட் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர சுப்பிரமணியசுவாமி முடிவு செய்துள்ளார். இதுகுறித்தும் இன்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்க உள்ளதாக அவர் அதில் கூறியுள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக