செவ்வாய், 13 மே, 2014

கே.டி. தாமஸ் : கேரள அரசும் மக்களும் மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலைப்பட தேவையில்லை

முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது என
 கே.டி. தாமஸ் கருத்து: கேரள அரசியல் தலைவர்கள் கண்டனம் முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கேட்டு  மக்களும், கேரள அரசும் மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலைப்பட தேவையில்லை என்று முன்னாள் நீதிபதியும், முல்லைப் பெரியாறு அணை உயர்மட்டக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான கேரளாவைச் சேர்ந்த கே.டி.தாமஸ் கூறியுள்ளார். மேலும், முல்லை பெரியாறு அணை மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாக அணை வல்லுனர் குழு, 7 நீர்பாசன துறை என்ஜினீயர்கள், 11 நீதிபதிகள் என ஒட்டுமொத்த குழுவினரே கருத்து தெரிவித்து உள்ளனர்.< ஆனால் கேரளாவில் அரசியல்வாதிகள் அணை உடைந்துவிடும் என பல ஆண்டுகளாக பீதியை கிளப்பி அதன் மூலம் அரசியல் செய்து வருகின்றனர்.< இதை முதலில் நிறுத்த வேண்டும். முல்லை பெரியாறு அணை உண்மையிலேயே பலமாக உள்ளது. இதனை பத்திரிகைகளும், சமூக ஊடகங்களும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கேரள அரசின் நிலைப் பாட்டை தெரிவிக்க என்னை அணை உயர்மட்ட குழுவில் நியமிக்கவில்லை. இதற்காக கேரள அரசிடம் இருந்து நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை’’ என்று தாமஸ் கூறியுள்ளார். இவரது கருத்துக்கு கேரளாவைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக