ஞாயிறு, 11 மே, 2014

மகாராஷ்டிராவில் நக்சல் கண்ணிவெடி தாக்குதல்: 7 போலீஸ்காரர்கள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்கள் நிகழ்த்திய கண்ணிவெடித் தாக்குதலில் 7 போலீசார் உயிரிழந்தனர்.
இன்று காலை 9.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமோர்சி தாலுகாவுக்கு உட்பட்ட பவிமுரண்டா - முர்முரி கிராமங்களுக்கு இடையே நடைபெறும் பணிநிமித்தமாக போலீஸ்காரர்கள் அப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் சென்ற வாகனம் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தூக்கி வீசப்பட்டது. இதில் 7 பேர் பலியாகினர். பலியானவர்கள் அனைவரும் நக்சல் தடுப்புப் பிரிவு சி-60-யைச் சேர்ந்த போலீஸ்காரர்களாவர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணிவெடி தாக்குதலுக்குப் பிறகும் அப்பகுதியில் நக்சல்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடடுள்ளனர். போலீஸாரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக