திங்கள், 5 மே, 2014

ஆ.ராசா திட்டவட்டம் : 2ஜியில் பிரதமர் ஒப்புதலுடனே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன !

2ஜி விவகாரத்தில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை.
தொலைத்தொடர்பு துறையின் ஆலோசனைகள் குறித்து சக அமைச்சர்களுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது என்று ஆ.ராசா திட்டவட்டமாக கூறினார். பிரதமர் ஒப்புதலுடனே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன என்றும் விளக்கம் அளித்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், சரத்குமார் ரெட்டி உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 17 பேருக்கும் பல்வேறு விதமான பொது கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மொத்தம் 1718 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் இன்று கோர்ட்டில் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று நீதிபதி சைனி முன்பு விசாரணை நடந்தது. ராசா உள்ளிட்ட 17 பேரின் எழுத்து மூலமான சாட்சியம் இன்று முதல் கோர்ட்டில் பதிவு செய்யப்படுகிறது. முதல் குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆ.ராசா இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார். அவரது எழுத்துப் பூர்வமான சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.  இதுபோல் 17 பேரிடமும் எழுத்துப் பூர்வமான சாட்சியம் பதிவு செய்யப்படுகிறது. கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் இவர்களிடம் கோர்ட்டு விசாரணை நடத்தும். ஆ.ராசா வாக்குமூலம்: ’’2ஜி விவகாரத்தில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தொலைத்தொடர்பு துறையின் ஆலோசனைகள் குறித்து சக அமைச்சர்களுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது என்று ஆ.ராசா திட்டவட்டமாக கூறினார். பிரதமர் ஒப்புதலுடனே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன என்றும் விளக்கம் அளித்தார்’’.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக