புதன், 21 மே, 2014

ஹன்சிகா தத்தெடுத்த 25 குழந்தைகள் கோடை விடுமுறையில் குலுமனாலி பயணம்

நடிகை ஹன்சிகா சமூக சேவை பணிகளில் ஆர்வம் உள்ளவர். சம்பாதிக்கும்
பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு ஒதுக்கி ஓசை இல்லாமல் உதவிகள் செய்து வருகின்றார். அத்துடன் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார். அந்த குழந்தைகளுக்கான உணவு, தங்கும் இடம், படிப்பு செலவு எல்லாவற்றையும் ஹன்சிகாவே கவனித்து கொள்கிறார். தற்போது கோடை விடுமுறையில் தத்தெடுத்த 25 குழந்தைகளையும் குலுமனாலிக்கு 5 நாள் இன்ப சுற்றுலாவாக அழைத்து செல்ல முடிவு செய்து இருக்கிறார். தமிழ், தெலுங்கில் ஹன்சிகா பிசியாக நடித்து வருகிறார். இந்த அலைச்சலிலும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி குலுமனாலி போகிறார். ஜூன் முதல் வாரம் பயணத்தை தொடங்குகின்றனர்.


குழந்தைகளின் பயணத்திட்டம், தங்கும் இடம் அனைத்து ஏற்பாடுகளையும் இப்போதே செய்து வருகிறார்.

இதுகுறித்து ஹன்சிகா தாய் கூறும்போது, 25 குழந்தைககளையும் ஹன்சிகா கோடை விடுமுறையை கழிக்க குலுமனாலி அழைத்து போகிறார். அடுத்த தடவை வெளிநாடுகளுக்கு அழைத்து போக திட்டமிட்டுள்ளார் என்றார். .maalaimalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக