வெள்ளி, 16 மே, 2014

மே 21ம் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி!!

டெல்லி: வரும் மே 21-ம் தேதி நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்கிறார்
நரேந்திர மோடி. நடந்து முடிந்த தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி இன்று வதோத்ரா தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மே 21ம் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி!! நாளை அவர் வாரணாசிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார். பிறகு காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு நடத்துகிறார். இதையடுத்து அவர் குஜராத் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு டெல்லி செல்கிறார். மே 21-ந்தேதி (புதன்கிழமை) நாட்டின் பிரதமராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி. ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் எளிய விழாவில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு அதிகாரிகள் செய்ய தொடங்கி விட்டனர் /tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக