புதுடில்லி:இந்தியாவின் பாதுகாப்பு துறையில், 100 சதவீத அன்னிய நேரடி
முதலீட்டிற்கு, மத்திய வர்த்தக அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.இதனால்,
பாதுகாப்பு துறை சார்ந்த சாதனங்களின் இறக்குமதி குறைந்து, உள்நாட்டு
தயாரிப்புகளுக்கு வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும்.தற்போது,
பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களில், அன்னிய நிறுவனங்கள் 26 சதவீதம்
முதலீடு செய்ய அனுமதி உள்ளது.இந்நிலையில், தொழிற்கொள்கை மற்றும்
மேம்பாட்டு துறையின் வரைவறிக்கையில், பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி
முதலீட்டை,100 சதவீதமாக உயர்த்தலாம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு,
வர்த்தக அமைச்சகம் நேற்று ஒப்புதல் வழங்கியது. காங்கிரஸ் அந்நிய முதலீட்டை ஊக்குவித்தால் நாட்டையே விற்று விட்டதாக
கூப்பாடு. அதுவே ஆர் எஸ் ஸின் கைப்பாவைகளால் நடந்தால் ' உள்நாட்டில்
வேலைவாய்ப்புகள் பெருகும். பாதுகாப்பு சாதனங்கள் சார்ந்த இறக்குமதி
செலவினம் குறையும்' எங்கே போய்விட்டீர்கள் தங்கங்களா..........எதிர்ப்பு
குரலெழுப்பிய தொழில் துறையினரே, தொழிலாளர்களே, வர்த்தகர்களே,
மீடியாக்களே......ரயில்வேயிலும், இன்னும் எல்லா துறைகளிலும் 100 சதவீத
அந்நிய முதலீட்டில் இந்தியா வளம் கொழிக்க போகிறது. வெள்ளையர்களுக்கு
இந்தியனின் வேர்வை என்றால் மிகவும் பிடிக்கும். இதைப்பற்றியெல்லாம் வாய்
திறந்தால் கொழுக்கட்டை வந்து அடைத்துக் கொள்ளும் என்பதால் மௌனிகளாகி
விட்டீர்களா ........?
கடந்த ஆண்டு மட்டும், அமெரிக்காவில் இருந்து, 190 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை, இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம், அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.இதற்கு முன், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா, இந்தியாவிற்கு அதிக அளவில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வந்தது. கடந்த ஆண்டு, முதன் முறையாக, இந்த இடத்தைஅமெரிக்கா பிடித்தது.
இந்தியாவில், ஏற்கனவே சிக்கோர்ஸ்கி, லாக்கீ மார்டின் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் அதன் துணை நிறுவனங்கள் மூலம், பாதுகாப்பு துறை சார்ந்த சாதனங்களை தயாரிக்க முடியும். ஆனால், அவற்றின் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் இந்தியர்களை மட்டுமே பணிக்கு அமர்த்த முடியும்.மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே, அயல்நாட்டு வல்லுனர்கள் இந்நிறுவனங்களில் தொழில்நுட்பஆலோசகர்களாக பணிபுரியலாம். இந்நிறுவனங்கள், இந்தியாவை விட்டு வெளியேறும்பட்சத்தில், எதையும் எடுத்துச் செல்லக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.மொத்தத்தில், பாதுகாப்பு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு மூலம், உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகும். பாதுகாப்பு சாதனங்கள் சார்ந்த இறக்குமதி செலவினம் குறையும். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக