ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

Priyanka Gandhi: வருணுக்கு Tuition பாடம் கற்றுகொடுங்கள்


வருணுக்கு பாடம் கற்றுகொடுங்கள்: பிரியங்கா வேண்டுகோள்
அமேதி, ஏப்.13-
சுல்தான்பூர் தொகுதியில் சஞ்சய் காந்தியின் மகனும் பா.ஜ.க வேட்பாளருமான வருண்காந்தி போட்டியிடுகிறார். இதனை எதிர்த்து அவரது சகோதரியும் ராஜிவ்காந்தியும் மகளுமான பிரியங்கா காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- “சில நேரங்களில் ஒருசிலர் வழி தவறி நடக்கலாம். அப்போது அவர்களுக்கு புத்தி சொல்வது மக்களின் கடமை. அதேபோல் ஒரு குடும்பத்தில் இளையவர் தவறு செய்யும் போது அவர்களுக்கு மூத்தவர்கள் நல்லதை எடுத்து கூறுதல் வேண்டும். அதே போல சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் எனது சகோதரராகிய வருண்காந்தி நீங்கள் நல்ல பாதையை இந்த தேர்தலில் எடுத்துச்சொல்ல வேண்டும்.
அவர் காந்தி என்று நான் ஒத்துக்கொள்வதில்லை. காரணம் காந்தி குடும்பம் இந்நாட்டிறகாக இரத்தம் சிந்தியிருக்கிறது. அரசியல் யாரையும் பிரிக்காது என்பதை அவர் புரிந்தகொள்ள வேண்டும். நல்ல அரசியல் பிரிவுக்கு வழிவகுக்காது. மக்களை ஒன்றினைக்கும். எனவே மக்களாகிய நீங்கள் நாட்டை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதை அவருக்கு இத்தேர்தலில் புரியவைக்க வேண்டும்” என்று கேட்டுகொண்டார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக