ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

ஸ்ரேயா வயது மூத்த ஹீரோவுடன் நடிக்க NO !

வயது மூத்த நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுத்தார் ஸ்ரேயா.தமிழில் ‘பருவராகம், ‘பொய் முகங்கள் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ரவிசந்திரன். கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர். ரஜினிகாந்த் நடித்த ‘மாவீரன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த பிரபல பட அதிபர் வீராசாமியின் மகன். ரவிசந்திரன் ஏற்கனவே ஜூஹி சாவ்லா, குஷ்பு, ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட டாப் ஹீரோயின்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். புதுஹீரோக்கள் வரவால் சற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் ‘ஸ்ரீருங்காரம்மா‘ என்ற கன்னட படத்தில் ஜோடியாக நடிக்க ஸ்ரேயாவிடம் கால்ஷீட் கேட்டனர். ஏற்கனவே ஸ்ரேயா கன்னடத்தில் ‘அரசு, ‘சந்திரா என 2 படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் ரவிசந்திரனுடன் நடிக்க வந்த பட வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். ரவிச்சந்திரனுக்கு தற்போது மார்க்கெட் இல்லை என்பதாலும் வயது மூத்த நடிகர் என்பதாலும் ஸ்ரேயா நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஸ்ரேயாவுக்கு பதிலாக லட்சுமிராய் நடிக்க - See tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக