திங்கள், 28 ஏப்ரல், 2014

தேர்தல் அதிகாரி மீது ஸ்டாலின் பாய்ச்சல் ! Jeya: thanks praveen ?

தேர்தல் நடத்தும் அதிகாரியே, தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடந்தது என, கூறக்கூடாது; மக்கள் தான் கூற வேண்டும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தன் குடும்பத்தினருடன் நேற்று அதிகாலை, "கேத்தே பசிபிக்' விமானத்தில், ஹாங்காங் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
"2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் தொடர்பாக, புதிய குற்றப்பத்திரிகையை, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், டில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது மற்றும் குற்றப்பத்திரிகையில், கருணாநிதியின் மனைவி, தயாளு பெயர் சேர்க்கப்பட்டிருப்பது போன்றவை எல்லாம், விசாரணையில் உள்ள வழக்கு தொடர்
பானவை என்பதால், அது தொடர்பாக, நான் எதுவும் கூற முடியாது. கலைஞரையும் தளபதி்யையும் எளிதி்ல் நெருங்க முடிவதால் குடைந்தெடுக்கிறார்கள் ஃ கோடநாடு போய் கொஞ்சம் குடையுங்கள் பார்க்கலாம் தைரியமிருந்தால்
லோக்சபா தேர்தலில், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன். பிரசாரத்திற்கு, மக்களிடையே மகத்தான வரவேற்பு இருந்தது. தி.மு.க., கூட்டணி, 40 தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும்.தேர்தலின் போது என்ன நடந்தது என்று, மக்களுக்கு நன்கு தெரியும். தேர்தல் நடத்திய அதிகாரியே, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்தது என்று சொல்லக்கூடாது. அதை மக்கள் தான் சொல்ல வேண்டும். முதல்வர் ஜெயலலிதா, கோடநாடு செல்வது வழக்கமான ஒன்றே. அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.நீலகிரி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் ராஜா, பணப்பட்டுவாடா செய்ததாக, வெளியான செய்தி குறித்து கேட்டபோது, அதற்கு பதில் அளிக்க, ஸ்டாலின் மறுத்து விட்டார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக