திங்கள், 28 ஏப்ரல், 2014

மோடியை கைது செய்ய ஆணித்தரமான ஆதாரம்: சிபல் ! இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் case


குஜராத்தில் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் வழக்கில் மோடி மற்றும் அமித் ஷா மீது ஆணித்தரமான ஆதாரம் உள்ளபோதும் அவர்களை கைது செய்யாமல் பாதுகாப்பது யார்? என்று கபில் சிபல் கேள்வியெழுப்பினார். அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:- இன்று நாடு முழுவதும் பல்வேறு வகைகளை பற்றி பேச்சு நிலவி வருகிறது. ஆனால் இது குஜராத்தின் என்கவுண்டர் வகைகளில் ஒன்றாகும். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டி.ஜி.வன்சாராவுக்கும், அம்மாநில உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் என்கவுண்டருக்கு முன்னும், என்கவுண்டரின் போதும் என்ன நடந்தது என்பதை தெளிவாக படம் பிடித்து காட்டியுள்ளது. பல்வேறு காவல்துறை அதிகாரிகளும் தங்கள் விரல்களை இவர்களை நோக்கி காட்டியபோதும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வன்சராவின் ராஜினாமா கடிதத்தில், களத்தில் இருந்த அதிகாரிகளான தாங்கள் அரசின் ரகசிய உத்தரவை செயல்படுத்தியதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் இது மோடியின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்கமுடியாது. மேலும் சிபிஐ மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் செயல்படுவதாக கூறப்பட்டாலும், அது மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை. இவ்வாறு கபில்சிபல் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக