ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

அழகிரி ; கலைஞர் என்னை சந்தித்தால் அவரும் தி.மு.க.விலிருந்து நீக்கப்படுவார்

நாகர்கோவிலைச் சேர்ந்த அழகிரி ஆதரவாளரான கபிலன் இல்ல காதணி விழா இன்று நடந்தது. இதில் மு.க. அழகிரி பங்கேற்று பேசியதாவது:–
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு கூடியிருக்கிறார்கள். இது பதவியை நம்பி வந்த கூட்டம் அல்ல. நம்பிக்கையின் பேரில் நட்பின் அடிப்படையில் திரண்ட கூட்டம். இந்த மாவட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடந்தபோது பொறுப்புகள் கிடைக்கும் என்றும், பதவிகள் தரப்படும் என்றும் கூறி பலர் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தனர். அவர்களின் குறைகள் தேர்தலுக்கு பிறகு நிவர்த்தி ஆகும்.
இந்த தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பற்றி பத்திரிகைகளில் படித்தேன். அதில், இப்போதைய தி.மு.க. எம்.பி. ஹெலன் டேவிட்சன் செய்த சாதனைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு மீண்டும் இங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அழகிரி அண்ணே எங்களை வச்சு காமடி கீமடி பண்ணல்லையே  

அதற்கு காரணம் இருக்கிறது. எனது சகோதரி கனிமொழி, டெல்லி திகார் ஜெயிலில் இருந்தபோது, அவரை ஹெலன் டேவிட்சன் தினமும் சந்தித்து பேசினார். எனவே தான் அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வில்லை.
வேட்பாளர் நேர்காணல் நடந்தபோது அவரது தகுதி, திறமைக்கு மதிப்பளிக்காமல் காசு, பணம் இருக்கிறதா? என்று கேட்டும், எவ்வளவு செலவழிப்பார்கள்? என்பதை அறிந்தும் வேட்பாளர் ஆக்கி உள்ளனர். இவர்களால் வெற்றியை பெற முடியாது. நிச்சயம் இந்த வேட்பாளர்கள் 4–வது இடத்திற்குதான் தள்ளப்படுவார்கள்.
விருதுநகர், தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பவர்களுக்கும், இதே நிலைதான் ஏற்படும். மதுரையில் வேட்பாளராக நிற்பவர் அழகிரி ஆதரித்தால் வெற்றி பெறுவேன் என்று கூறி உள்ளார்.
ஆனால் அவர் இதுவரை என்னை சந்திக்கவில்லை. இனி வந்து சந்தித்தாலும் அவருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை.
கடந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற டி.ஆர். பாலு இப்போது தஞ்சாவூர் தொகுதிக்கு மாறி உள்ளார். அரக்கோணத்தில் போட்டியிட்டவர் ஸ்ரீபெரும் புதூருக்கு வந்துள்ளார். இப்படி தொகுதி மாறி போட்டியிட்டால் இவர்கள் வெற்றி பெற்று விட முடியுமா? அதற்கு இவர்கள் என்ன எம்.ஜி.ஆர். அல்லது கலைஞரா?
மதுரையில் எனது பிறந்த நாள் கொண்டாடியபோது, போஸ்டர் அடித்ததற்காக ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்திற்கு வந்த எனது ஆதரவாளர் நீக்கப்பட்டார். கம்பத்தில் ஒருவர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார். ஆனால் இப்போது வருங்கால முதல்வரே, நாளைய தமிழகமே என போஸ்டர் அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. கட்சியின் தலைவரை கத்தி முனையில் மிரட்டுகிறார்கள்.
கட்சியின் பொருளாளருக்கு கணக்கு வழக்கு பார்ப்பதுதான் வேலை. ஆனால் மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சியின் தலைவருக்கு வரும் கடிதங்களை, குறைகளை அவரது பார்வைக்கே செல்லாமல் தடுத்து விடுகிறார்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது. அதில் உள்ள செங்கல், சிமெண்ட்டில் கூட எனக்கு உரிமை உள்ளது. என்னை தி.மு.க.வில் இருந்து பிரிக்க முடியாது. இன்று கட்சியின் தலைவர் மதுரைக்கு பிரசாரம் செய்ய வருகிறார்.
அப்போது பாசத்தால் அவர், என்னை சந்தித்து விட்டால் அவரையும் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்கள் என்பதால்தான் இன்று நான் நாகர்கோவிலுக்கு வந்துள்ளேன். இந்த தேர்தலுக்கு பிறகு நிலைமை மாறும். கட்சியின் தலைவர் நம்மை அரவணைக்கும் நிலை உருவாகும்.
இவ்வாறு அவர் பேசினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக