ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

லதா ரஜினிகாந்த் : அவரை (மோடி) எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம் ! பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது !

மோடி எங்களை கவுரவபடுத்தி விட்டார்: லதா ரஜினிகாந்த் பேட்டி
 பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த 13ந் தேதி சென்னைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இது தொடர்பாக ரஜினிகாந்தின் மனைவி லதா பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நன்பராவார். ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மோடி நேரில் வந்து பார்த்தார். இப்போது அவர் எங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து எங்களை சந்தித்தது உள்ளார். இதனால் நாங்கள் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவபடுத்தி விட்டார் என்று கூறினார்.
24-ந் தேதி ஓட்டு பதிவின்போது ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரியில் முதல் ஆளாக சென்று ஓட்டு போட்டார்.
இதுபற்றி லதாவிடம் கேட்டபோது ‘‘ரஜினி முதல் ஆளாக சென்று ஓட்டுபோட்டதற்கு எந்த திட்டமும் இல்லை. அவர் எப்போதும் காலையிலே சென்று காத்திருந்து ஓட்டு போடுவார். அன்றும் அதேபோல் முன்கூட்டி சென்றார். அவர் முதல் ஓட்டு போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் அது தற்செயலாக நடந்தது’’ என்று கூறினார்.
கோச்சடையான் படம் வெளியாவதில் எல்லாமே நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. நான் முதல் நாளில் முதல் காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க உள்ளேன். இது எனக்கு சிறப்பான தருணம் என்று கூறினார். 

1 கருத்து:

  1. Which family Mam, U mean RSS family, Modi is minorty blood consuming animal, All muslim should ignore Rajni new moview Kochatayan, Muslim should start movement aganist rajini like PMK and Baba film

    பதிலளிநீக்கு