அதிமுக
ஆட்சியில் தமிழகம் இருண்ட மாநிலமாக மாறிவிட்டது. மோடி அலை என்ற பெயரில்
மிகப்பெரிய சூழ்ச்சி பிரச்சாரம் நடைபெறுகிறது. அண்
ணா பெயரை வைத்துக்கொண்டு
அவரது பெயரால் அமைக்கப்பட்ட நூலத்தை மூட நினைத்தவர் ஜெயலலிதா. சமச்சீர்
கல்வித் திட்டத்தையும் முடக்க நினைத்தவர்தான் ஜெயலலிதா. சேது சமுத்திரத்
திட்டத்தால் தமிழகத்தின் வளம் பெருகும், வளர்ச்சி ஏற்படும்.
ரூ.800
கோடி செலவில் தமிழக சட்டசபைக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து,
மருத்துவமனையாக மாற்றினர். ஆட்சி மாறும் போதெல்லாம், காட்சி மாற வேண்டுமா?
அ.தி.மு.க.,வை உருவாக்கியவர்கள் அண்ணா பெயரை காப்பாற்றினீர்களா? அண்ணா
பெயரில் அமைக்கப்பட்ட நூலகம் பெயரை மாற்றிவிட்டனர். இதுதான் அண்ணாவுக்கு
காட்டுகின்ற பெருமையா? தலைவர்களை மதிக்க ஆளும் கட்சியினர் மறந்துவிட்டனர்.
சமச்சீர்
கல்வியை முடக்க அ.தி.மு.க., அரசு முயற்சி செய்தது. இதனை எதிர்த்து நீங்கள்
கோர்ட்டிற்கு சென்றீர்கள். ஜெ.,வின் மனுவை தள்ளுபடி செய்ததால் தான்
சமச்சீர் கல்வி முறை தப்பித்தது. தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட புதிய
தலைமைச்செயலகம், மருத்துவமனையாக கட்டப்பட்டது. சேது சமுத்திர திட்டத்தை
நிறைவேற்ற வேண்டும் என அண்ணா விரும்பினார். சேது சமுத்திர திட்டம் கொண்டு
வரப்பட்டால், உலக நாடுகளுடன் இந்தியாவும் போட்டியிடும் அளவுக்கு வளரும்.
அண்ணாத்துரை கொண்டு வந்த திட்டங்களுக்கு சமாதி கட்டத்தான், நீதிமன்றம்
செல்வேன் என கூறுகிறார். நீதிமன்றம் சொன்னபடி கேட்கும் என்ற திமிர்வாதம்
தான். தற்போது நீதிமன்றம் சொன்னபடி கேட்கவில்லை என கூறினார்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக