திங்கள், 7 ஏப்ரல், 2014

அமலாபால் - இயக்குநர் விஜய் திருமணம்!

கிரீடம், மதராசப்பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் இருவரும் அது குறித்து மறுப்பு அறிக்கைகூட வெளியிடவில்லை.
இந்நிலையில் விஜய் இயக்கிய சைவம் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது.  இந்த விழாவிற்கு தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார் அமலாபால்.  
இந்த சூழ்நிலையில்,  அமலாபாலும், ஏ.எல்.விஜய்யும் ஜுன் 12-ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் இணைந்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
  இது குறித்து அமலாபால், ‘’பத்திரிகை நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், எங்கள் எதிர்காலம் குறித்து, விஜய் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் ,நானும், விஜய்யும் முறைப்படி அறிவிப்போம்’’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக