ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

நீதிபதி சதாசிவம் தீர்ப்பை பற்றி, 'யாரும் பயப்படாதீர்; நல்ல தீர்ப்பு வழங்குவேன் என்பது ???

சென்னை:ராஜிவ் கொலை குற்றவாளிகள் மீதான வழக்கில், ஏப்., 25ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருப்பது யாருக்கு லாபம் தரும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கேள்வி எழுப்பி உள்ளார்.தென் சென்னை தி.மு.க., வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, எம்.ஜி.ஆர்., நகரில், நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது: தமிழகத்திற்கு வளம் சேர்க்கும், சேது சமுத்திர திட்டத்தை, அ.தி.மு.க., கைவிட்டு விட்டது. அந்த திட்டத்திற்கு ஜெயலலிதா, தடையாக உள்ளார்.சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, ஒரு போராட்டத்தை, விரைவில் தி.மு.க., அறிவிக்கும். அப்படி அறிவிக்கும்போது, ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கும்.இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன். 'ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், ஆகியோரின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என தி.மு.க., மற்றும் தமிழகத்தில் உள்ள பல கட்சிகள், நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தன.  ஏழு பேரையும் விடுவித்து விட்டு ஜெயா அறிக்கை விடவேண்டியது தானே. விட விருப்பமின்றி, வேண்டுமென்றே விடாமல் இருப்பதற்காக அறிக்கை விடுவது, மத்திய அரசு எப்படியும் தடுத்துவிடும் என்று தெரிந்த கொண்டே ஜெயா செய்த நயவஞ்சக நரித்தனம். அல்லது, சாணக்கியத்தனம் இல்லாதது. எப்படியோ இப்படிப்பட்ட, முதல்வர் நமக்கு தேவையா?


இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோது, தலைமை நீதிபதி சதாசிவம், 'தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அவர்களை விடுவிக்க முடியும்' என, கருத்து தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து, தமிழக அரசு, சட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல், அவசர, அவசரமாக மேற்கொண்ட நடவடிக்கைக்கு, மத்திய அரசு, மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் தர வேண்டும் என, ஜெயலலிதா கூறியிருந்தார்.மத்திய அரசு, அதற்கு ஒப்புதல் வழங்காததோடு, 'தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்தது.'அந்த வழக்கின் தீர்ப்பு, ஏப்., 25ம் தேதிக்குள் வழங்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம், கோவையில் நடந்த பொது விழாவில் தெரிவித்துள்ளார்.

வரும் 24ம் தேதி, தமிழகத்தில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நீதிபதி சதாசிவம், ஓய்வு பெற உள்ள, 25ம் தேதிக்குள், ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என கூறியிருப்பது, அரசியல் ரீதியான விளைவை, தமிழகத்தில் ஏற்படுத்துமோ என்ற சந்தேகம், பலருக்கு எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு, லோக்சபா தேர்தலுக்கு முன் வரும் என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியே, ஒரு பொது விழாவில் அறிவித்திருப்பது, எத்தகைய சாதக பாதகங்களை ஏற்படுத்தக்கூடும்; அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா என்பதை எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப முடிவு செய்வது, நீதிமன்ற நெறிகளை காப்பாற்றப் பயன்படும். அனைவருக்கும் நலன் பயக்கும்.இது நல்ல விஷயமா? யாருக்கோ உதவி செய்வதற்காக கூறப்பட்டதா?என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சதாசிவம் எனக்கும் வேண்டியவர் தான்.நீதிபதியாக இருப்பவர், தான் சொல்லப்போகும் தீர்ப்பை பற்றி, 'யாரும் பயப்படாதீர்; நல்ல தீர்ப்பு வழங்குவேன்' என்பது, எங்கு சென்று முடியும்? என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக