புதன், 30 ஏப்ரல், 2014

நித்யா மேனனிடம் பெண் இயக்குனர் அஞ்சலி மேனன் கெஞ்சல்

சென்னை: கால்ஷீட் தர மறுத்த நித்யா மேனனிடம் கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டு கெஞ்சினார் பெண் இயக்குனர்.‘வெப்பம், ‘180, ‘மாலினி 22 பாளையங்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். இவரிடம்  ‘பெங்களூர் டேஸ் என்ற மலையாள படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டு இயக்குனர் அஞ்சலி மேனன் அணுகினார். ஆனால் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் கால்ஷீட் இல்லை என்று மறுத்துவிட்டார்.
இதையடுத்து பார்வதி மேனனை ஒப்பந்தம் செய்தார்.மலையாளத்தில் ஏற்கனவே நித்யா மேனன் நடித்த படங்கள் ஹிட் ஆகி இருந்ததால் அவரை எப்படியாவது தனது படத்தில் நடிக்க வைக்க எண்ணினார் இயக்குனர். அடிக்கடி அவரை தொடர்பு கொண்டு, ‘என் படத்தில் நீ நடிக்காதது பெரிய குறையாக தெரிகிறது. கெஸ்ட் ரோலிலாவது நடிக்க வேண்டும்? என்று கெஞ்சினார். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அஞ்சலி வற்புறுத்திய வண்ணம் இருந்ததால் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்தார் நித்யா. பிறகு அவர் நடித்த காட்சிகள் பெங்களூரில் படமாக்கப்பட்டது. மேக் அப் போடாமல் நித்யா மேனன் நடித்தார். ஏற்கனவே இப்படத்தில் நஸ்ரியா நாசிம், பார்வதி மேனன் என 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். 3வதாக நித்யா மேனனையும் நடிக்க வைத்ததால் இயக்குனர் மீது மற்ற 2 ஹீரோயின்கள் கோபமாக உள்ளனர். - See tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக