சனி, 12 ஏப்ரல், 2014

ரஜினியை சந்திக்கிறார் மோடி ! ரஜனி , ஏராளமான பொய்கள் ? பெரும் காப்பரெட் மோசடியாக பரிணமிக்கிறார் !


நாளை சென்னை வரும் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க இருப்பதாக பாஜக பத்திரிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. திரைத்துறையைத் தாண்டி ரஜினிகாந்த் உன்னதமான மனிதர்.? அவர் ஒரு தேசியவாதி. நாட்டு நலனில் மிகவும் அக்கறையுள்ளஅவர் சரியான நேரத்தில் தனது கருத்தைத் தெரிவிப்பார்" இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நாளை ரஜினிகாந்தை - நரேந்திர மோடி சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது?

பொய்களை திரும்ப திரும்ப சொன்னால் அவை உண்மையாகிவிடும் என்பது சிலரின் நம்பிக்கை. குறிப்பாக அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் இந்த டெக்னிக்கை அடிக்கடி உபயோகப்படுத்துவார்கள் .
தமிழ் சினிமா உலக வரலாற்றில் எத்தனையோ அபத்தங்கள் நிகழ்துள்ளன. வெறும் பொய்களாலேயே கட்டி எழுப்பபட்ட மாளிகைகளும் பல உண்டு,
வசூல் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக நடிகர் ரஜனிகாந்த் எதோ ஒரு அற்புதமான நடிகன் ஒரு வரலாற்று பொக்கிஷம் மகா மகா ஆத்மீக பேர்வழி என்றெல்லாம் கொஞ்சம் கூட உண்மையே இல்லாத பொய்களை   மீடியாக்கள் வெட்கம் இல்லாமல் பரப்பி வருகின்றனர், இதர சினிமா பிரபலங்களும் தங்கள் வருமானம் என்றே ஒற்றை காரணத்திற்காக வெட்கமே இல்லாமல் ராஜனிகாந்தை அடுத்த மகாத்மா லெவலுக்கு தலையில் தூக்கி வைத்து பொய் ஜால்ரா வீசுகின்றனர்.


எம்மை பொருத்தவரை அவர் ஒரு சாதாரண நடிகர் . சிறந்த நடிகரே அல்ல. இதில் வேடிக்கை என்னவென்றால் அவரே இதை பல தடவை ஒப்புக்கொண்டும் உள்ளார். ஆனாலும் சினிமா ஜால்ராக்களும் பத்திரிகையாளர்களும் விடுவதாய் இல்லை . இந்த யுகத்தின் அற்புத கலைஞன் மனிதகுலம் கண்டிராத மாணிக்கம் என்றெல்லாம் அவரை அளவுக்கு மீறி பலூன் போன்று ஊதி ஊதி பெருப்பித்து விட்டார்கள்.

அவர் நடித்த படங்கள் நல்ல பொழுது போக்கு படங்கள் வரிசையில் சேரும் . அவை ஒன்றும் காவிய லெவலுக்கு இல்லை.

அவரது நடிப்பு வெறும் நாடக பாணி.
செயற்கையான அங்க சேஷ்டை இயற்கைக்கு மாறான கை அசைவுகள் போன்றவையே.
அவரது கண்ணிலோ முகபாவத்திலோ ஒருபோதும் அவர் நடிக்கும் பாத்திரம் தெரிவதில்லை .அந்த பாத்திரத்தை கண்களால் காட்டக்கூடிய அளவு நடிப்பு அவரிடம் இல்லை .
ஆனால் அவரை பார்க்க ரசிகனுக்கு பிடித்திருந்தது  .அதனாலும் இதர கலைஞர்களின் கூட்டு முயற்சிகளாலும் அவரது படங்கள் பெரும் வெற்றி பெற்றன,
கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படங்களும்கூட ஒரு காலத்தில் கேரளாவில் பெருவெற்றி பெற்றன . அவற்றின் காரணமாக யாரும் ஷகீலாவை ஒரு பகவதி அம்மன் ரேஞ்சுக்கு உயர்த்தவில்லை .ஏனென்றால் அவர் ஒரு பெண் .
ரஜினிகாந்திடம் திரை நடிப்பு இல்லையே தவிர நிஜவாழ்வில் நடிக்கும் திறமை மற்றும் பொது மேடைகளில் நடிக்கும் திறமை போன்றவை தாராளமாக உண்டு,
காவிரி பிரச்சனையில் பாரதிராஜாவின் ஊர்வலத்தை பார்த்து அதிர்ந்து போய்  அதை நீர்த்து போகச்செய்யும் வகையில் போட்டி உண்ணாவிரதம் மேடை ஏற்றி காடினாரே.
அது மட்டுமா எப்போதுமே வராது என்று தெளிவாக தெரிந்த கங்கை காவிரி இணைப்புக்கு தான் ஒரு கோடி தரத்தயார் என்று அறிவித்து தமிழர்களை எவ்வளவு சீப்பாக ஏமாற்றினார் .
நிஜமான போராட்டமான பாரதிராஜாவின் ஊர்வலத்தை பின்னுக்கு தள்ளிய நிஜ நடிகன் ரஜனி ,
அவர் சகல விதமான மதுபானம் மற்றும் பெண் சகவாசம் எல்லாம் தாராளமாக அனுபவித்தவர் . அதன் காரணமாக தற்போது நோயாளியாகவும் ஆகிவிட்டார் .
அவரிடம் சில நல்ல குணங்கள் இருப்பதை நாம் மறுக்கவில்லை . அதை பாராட்டுகிறோம் .
ஆனால் அவரை ஒரு மகா உத்தமர் என்பது போலவும் தமிழ்நாட்டை அவர்தான் காப்பாற்ற வேண்டும் என்பது போல கூச்சல் போடுவதால் நாம் வரை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய வேண்டி இருக்கிறது .
அரசியலில் அவர் மேற்கொள்ளும் தீர்மானம் எல்லாமே வெறும் சுய நல அடிப்படையிலேயே அமைந்துள்ளது . திமுகவை ஆதரித்த போதும் பின்பு அதிமுகவை ஆதரித்த போதும் சரி நாட்டு நலன் என்ற அடிப்படையில் அல்லாமல் வெறும் சுய நல அடிப்படையிலேயே  முடிவுகளை மேற்கொண்டார்.
போயஸ் கார்டன் கார் பாக்கிங் விவகாரத்தால் திமுகவுக்கு சப்போர்ட்

பின்பு ராமதாஸ் ரஜினி பட தியேட்டர்களுக்கு கலவரம் தூண்டியதை கலைஞர் தடுக்கவில்லை என்ற கோபத்தில் அதிமுகவுக்கு சபோர்ட்.

அதன் பின்  சமசீர்கல்வி மூலம் தனது குடும்ப கல்லூரி பிசிநேசுக்கு ஆபத்து என்ற காரணத்தால் அதிமுகவுக்கு சப்போர்ட் .

இதில் வேடிக்கை என்னெவென்றால் திமுகவும் அதிமுகவும் ரஜனியை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள் . அதனால்தான் ஜெயலிதா நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவரை ஊதாசீனம் செய்கிறார்
இவரது படங்கள் தற்போது திரைக்கலை என்ற வரை முறையை தாண்டி ஒரு பெரும் காப்பரெட் மோசடியாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது,
அளவுக்கு அதிகமாக ஒரு நம்பவே முடியாத அளவு கற்பனை உலகை கட்டி எழுப்பி காசை பிடுங்கும் காப்பரெட் தில்லு முல்லு தான் நடைபெறுகிறது
இந்த மோசடிக்கு அரசு சலுகைகள் எதுவும் வழங்க கூடாது .திரைப்பட வளர்ச்சியை நோக்கமாக கொண்டு  அரசு வழங்குகின்ற சலுகைகள் கலையை ஊக்கிவிக்க பயன்பட வேண்டுமே அல்லாது வெறும் காப்பரெட்  கயமைதனதுக்கு துணை போக கூடாது .
ரஜனியையும்  சுற்றி மற்றும் இதர மசாலா கீரோக்களையும்  சுற்றி அமைக்கப்படும் காப்பரெட் வலைகள் சகல விதமான சிறு பட்ஜெட் படங்களையும் நசுக்குகிறது .
சிறு பட்ஜெட் படங்கள்தான் அனேகமாக அற்புத படைப்புக்களாக காலாகாலமாக   தயாரிக்கப்பட்டு வருகிறது .
ரஜனியும் அவரது பாணியில் வரும் இதர மசாலா மாஸ் கீரோக்களும் சுனாமி போன்று சிறிய கலை படைப்புக்களை அழித்துவிடுகின்றன 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக