திங்கள், 28 ஏப்ரல், 2014

ராபர்ட் வதேராவின் நில முறைகேடு வீடியோவை வெளியிட்டது பாஜக !


ராபர்ட் வதேரா மீதான நிலஅபகரிப்பு புகார்களுக்கு சோனியாகாந்தி குடும்பத்தினர் பதில் சொல்ல வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. ராபர்ட் வதேராவின் நில முறைகேடு தொடர்பாக 8 நிமிடங்கள் கொண்ட வீடியோ மற்றும் 6 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை பாஜகவின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், குஜராத் வளர்ச்சி குறித்து விமர்சிக்கும் பிரியங்கா காந்தி, தன்னுடைய கணவர் ராபர்ட் வதேராவின் தனிப்பட்ட வளர்ச்சி குறித்து பதில் சொல்ல வேண்டும். ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ராபர்ட் வதேரா வாங்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலங்களில் மட்டும் ராபர்ட் வதேரா நிலம் வாங்குவது ஏன்.
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் எவ்வாறு ப.சிதம்பரம் காப்பாற்றப்பட்டாரோ, ரயில்வே ஊழல் வழக்கில் எவ்வாறு பவன்குமார் பன்சால் காப்பாற்றப்பட்டாரோ, நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் எவ்வாறு காப்பாற்றப்பட்டு வரகிறாரோ, அதேபோல் ராபர்ட் வதேராவையும் காப்பாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கு மேல் போபர்ஸ் வழக்கு குறித்து நான் பேசவில்லை என்றார்.
கடந்த சில நாட்களாக உத்திரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரியங்கா காந்தி, குஜராத் மாநில வளர்ச்சி குறித்து விமர்சனம் செய்து வரும் நிலையில் பாஜக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ஆளு முகமே சொல்லுது !போயும் போயும் பிரியங்காவுக்கு இவன்தான் கிடைத்தானா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக