செவ்வாய், 22 ஏப்ரல், 2014

சீரழிக்கும் திறனில் சிறந்தவர் இந்த லேடி தான் : ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தை தீர்மா னிப்பதற்கான தேர்தல் நெருங்கிவிட்டது. மத்தியில் கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து தமிழகத்திற்கு துரோகங்களை இழைத்த காங்கிரஸ்கட்சியை வீழ்த்துவது மட்டுமின்றி, தமிழகத்தை கடந்த 47 ஆண்டுகளாக சீரழித்து வரும் அ.தி.மு.க.மற்றும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவதற்கும் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் தேர்தல் மிகப்பெரியவாய்ப்பு ஆகும். கடந்த 47 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிடக் கட்சிகளின்ஆட்சிகளில் தமிழகம் பெற் றதையும், இழந்ததையும் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு வாக்காளர் களைக் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னையில் நேற்று பிரச்சாரத்தை நிறைவு செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிர்வாகத் திறனில் சிறந்தவர் மோடியா... அல்லது இந்த லேடியா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.  மூன்றே மாதங்களில் மின்வெட்டைப் போக்கி தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக மாற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 3 ஆண்டுகளாக தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கி தொழில் வளர்ர்சி யையும், பொருளாதார வளர்ச்சியையும் சீரழித்தது, வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியது ஆகியவற்றை வைத்துப்பார்க்கும் போது சீரழிக்கும் திறனில் சிறந்தவர் இந்த லேடி தான் என்பது தெளிவாகிறது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக