வெள்ளி, 25 ஏப்ரல், 2014

தஞ்சையில் ரகசியமாக வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்த அதிகாரி பிடிபட்டார் !

தஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த வாக்குச் சாவடி அதிகாரி பிடிபட்டார். 
தஞ்சாவூரில் இருந்து நாஞ்சிக்கோட்டை செல்லும் வழியில் உள்ள மறியல் என்னுமிடத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் 8 வாக்குப்பதிவு எந்திரதில் வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 8 வாக்குப்பெட்டிகளூம் சீல் வைக்கப்பட்டது.  பின்னர் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குப்பெட்டியை லாரியில் ஏற்றுவதற்காக வெளியில் காத்திருந்தனர்.
அப்போது, அந்த வாக்குப்பதிவு மையத்தின் அதிகாரி, 8 வாக்கு பெட்டிகளையும் பிரித்து வாக்குகளை எண்ணிக் கொண்டிருந்தார்.  ஏதேச்சையாக அந்தபக்கமாக சென்ற ஒரு வாக்குச்சாவடி முகவர்,  அதை பார்த்து, அங்கிருந்த மற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கும், திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் டி.ஆ.ர் பாலுவுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து டி.ஆர்.பாலு அவரது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.   நடந்த சம்பவம் குறித்து ஆவேசமாக தனது கண்டனத்தை தெரிவித்தார்.  அவரை போலீசார் சமாதானம் செய்துவருகிறார்கள்.  8 வாக்கு பெட்டிகளும் திறைந்தே கிடக்கிறது.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
படங்கள் : பகத்சிங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக