திங்கள், 21 ஏப்ரல், 2014

ஜெயலலிதாவின் ஒப்புதல் வாக்கு மூலம் : திமுகவின் திட்டங்களை முடக்கி இருக்கிறோம் ! இது தாண்டா ஜெயலலிதா !

திமுகவின் தன்னலத் திட்டங்களைத்தான் முடக்கி இருக்கிறோம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.நீங்கள் முடக்கிய சமசீர் கல்வியை நீதிமன்றம் விடுவித்ததே ? வாய்தா ராணி அவர்களே அந்த நீதிமன்றத்தையும் முடக்கி இருப்பீர்களா ? மதுரவாயில் பறக்கும் சாலை ? அண்ணா நூலகம் ? செம்மொழி பூங்கா ? சேது சமுத்திர கால்வாய் ?
திமுகவின் திட்டங்களை அதிமுக அரசு முடக்கிவிட்டதாக கருணாநிதி
கூறிய புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் இதை அவர் தெரிவித்தார்.
வட சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபுவை ஆதரித்து ஆர்.கே.நகர்-மணலி சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியது:
முடக்கத்துக்குக் காரணம் என்ன? ""திமுக கொண்டு வந்த திட்டங்களை அதிமுக அரசு முடக்கி விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி உள்பட அந்தக் கட்சியினர் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். மக்கள் நலத் திட்டங்களை அதிமுக அரசு முடக்கவில்லை.
உதாரணமாக, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் திட்டம் திமுகவால் கொண்டு வரப்பட்டது. அதனை முடக்கி வைத்தோம். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டம். திமுக தலைமைக்கு கமிஷன் பெற்றுத் தரும் திட்டம். ஒரு மனநோயாளியின் கையில் தமிழகம் இது தாண்டா ஜெயலலிதா !

தமிழகத்தின் நெற் களஞ்சியமான டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தைக் கொண்டு வந்தது திமுக. இதில் முக்கியப் பங்கு வகித்தவர் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு. இதனை எதிர்த்தோம், நாங்கள் முடக்கி வைத்தோம். ஏனென்றால், விளை நிலங்களை பாலைவனங்களாக மாற்றும் திட்டம் மீத்தேன் எரிவாயு திட்டம். ஆனால், இது திமுகவினர் லாபம் அடையும் திட்டம்.
அழகிரியின் குற்றச்சாட்டுக்கு கருணாநிதி பதில் அளிப்பாரா? தென் மாநில மீனவர்களின் வாழ்வாதாரங்களை ஒட்டுமொத்தமாக அழிக்கக் கூடியதும், சுற்றுச்சூழலை சீரழிக்கக் கூடியதுமான சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் திமுகவின் தூண்டுதல் காரணமாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தை அதிமுக எதிர்த்தது. ஏனென்றால், இந்தத் திட்டத்தினால் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீனவர்கள்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் தமிழக அரசின் கப்பல்கள் கூட செல்ல முடியாத அழிவுத் திட்டம் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம். ஆனால், இந்தத் திட்டம் கருணாநிதி குடும்பத்துக்கு அட்சயப் பாத்திரம். சேது சமுத்திரத் திட்டத்தில் என்னென்ன தவறுகள் நடந்துள்ளன என்பதும், தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் மூலம் எவ்வளவு பணத்தை டி.ஆர்.பாலு கொள்ளையடித்தார் என்பதும் தனக்குத் தெரியும் என்று மு.க.அழகிரி அண்மையில் நாகர்கோவிலில் பேசியுள்ளார். இதற்கு என்ன பதில் என்பதை கருணாநிதி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மதுரவாயல் திட்டம்-முழு எதிர்ப்பு இல்லை: மதுரவாயல்-சென்னை துறைமுக உயர் மட்ட சாலைத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இத் திட்டத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கவில்லை. இதில் சில மாற்றங்களை ஒரு சில இடங்களில் மட்டும் செய்ய வேண்டும் என்றுதான் கோருகிறோம். கூவம் ஆற்றின் நடுவில் தூண்களை அமைக்காமல், ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி கரையில் தூண்களை அமைக்கும்படி நாங்கள் சொல்கிறோம்.
அதன்படி செய்தால், பெருமழை பெய்யும்போது சென்னை நகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் தடுக்கப்படும். இதனை ஏன் செய்ய மறுக்கிறார்கள்? மக்கள் நலத் திட்டமாக இருந்தால் அதனைச் செயல்படுத்த அதிமுக அரசு தயங்காது.
அதே சமயத்தில், தன்னலத் திட்டமாக, மக்கள் விரோதத் திட்டமாக இருந்தால் அதனை முடக்கி வைக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக