வியாழன், 10 ஏப்ரல், 2014

தி.மு.க. எம்.பி. ரித்தீஷ் அ.தி.மு.க.வில் இணைந்தார் ! அழகிரியின் தீவிர ஆதரவாளர்.

நடிகர் ரித்தீஷ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடன் ரித்தீஷ் எம்.பி.யும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதையடுத்து ரித்தீஷ் எம்.பி.க்கு தி.மு.க. தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் ரித்தீஷ் எம்.பி. புறக்கணிக்கப்பட்டார். இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார். அவர் அ.தி.மு.க.வில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இன்று மதியம் ரித்தீஷ் எம்.பி. போயஸ் கார்டன் சென்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக