மத்தியபிரதேசம்
சிங்குரவ்லி மாவட்டத்தில் மாவட்ட தலைநகரில் இருந்து 15 கிலோமீட்டர்
தூரத்தில் உள்ளது நல்கதானி கிராமத்தில் ரோட்டோரம் ரத்தம் காயங்களுடன்
கிடந்த 14 வயது சிறுமியை கிராமத்தை சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கபட்டது பின்னர் போலீசாருக்கு
தகவல் தெரிவிக்கபட்டது. போலீஸ் விசாரணையில் கூறப்படுவதாவது:-
தலித்
சிறுமி ஒருவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி
கொண்டிருந்தார். சித்திக் பகுதிக்கு செல்லும் பஸ்சில் செல்பவர்கள் அவருக்கு
லிப்ட் கொடுக்க முன்வந்தார்கள். அந்த பஸ் உள்ளூரை சேர்ந்த ஒரு வியாபார
பிரமுகரின் திருமண வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் ஒரு டிரைவர்
2 கிளினர் உள்பட 5 பேர் இருந்தனர். பஸ்சில் இருந்த 5 பேரும் சிறுது
நேரத்தில் சிறுமியை பலவந்தபடுத்தி உள்ளனர்.
இதனால்
அந்த சிறுமி அலறி உள்ளார். உடனே 5 பேரும் பஸ் ஜன்னலை மூடினார்கள். பின்னர்
பஸ்சை ஒதுக்குபுறமான ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் நிறுத்தி, 5
பேரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் பஸ்ஸில்
இருந்து சிறுமியை தூக்கி வீசி உள்ளனர். இதில் சிறுமி பலத்த காயம் அடைந்து
உள்ளார்.
இதுகுறித்து
சிறுமியின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும்
மருத்துவ சான்றிதழுக்காக காத்திருக்கின்றனர். குற்றவாளிகளில் ஒருவனை
போலீசார் கைது செய்து உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக