தேர்தல்
செலவுக்கு 2 கோடி கேட்டு டெல்லி தொழிலதிபருக்கு அடி, உதை பாஜ எம்.பி.மீது
வழக்கு -
புதுடெல்லி: தேர்தல் செலவுக்காக டெல்லி தொழிலதிபரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜ எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் அவரது மனைவி அனாமிகா
கவுதம் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜவை சேர்ந்த நிஷிகாந்த் துபே ஜார்கண்ட் மாநிலம் கோடா மக்களவை தொகுதி உறுப்பினராக இருக்கிறார். இவர் இந்த > தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சந்தீப் சர்மாவுக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கங்கள் உள்ளன. இந்நிலையில் தேர்தல் செலவுக்காக ரூ. 2 கோடி தர வேண்டும் என சந்தீப் சர்மாவுக்கு நிஷிகாந்த் துபேவின் ஆட்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். கடந்த மாதம் டெல்லியில் சந்தீப் சர்மாவை அவரது வீட்டில் வைத்து நிஷிகாந்த்தும், அவரது மனைவி அனாமிகாவும் சந்தித்துள்ளனர். அப்போது சந்தீப் சர்மாவை அவர்கள் அடித்து உதைத்ததாகவும், பணம் தராவிட்டால் தொலைத்து விடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சந்தீப் சர்மா போலீசில் புகார் கொடுத்தார்.
அவர்கள் வழக்கு பதிவு செய்யவில்லை. இதை தொடர்ந்து மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சர்மா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை மாஜிஸ்திரேட் தீரஜ் மிட்டல் விசாரித்து, சந்தீப் சர்மா குற்றச்சாட்டின் அடிப்படையில் நிஷிகாந்த் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த துக்ளக் சாலை காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார். இதற்காக
அவர்களை கைது செய்ய தேவையில்லை என்றும் உத்தரவிட்டார்.இந்த தகவலை டெல்லி போலீஸ் துணை கமிஷனர் தியாகியும் உறுதி செய்துள்ளார். இதை தொடர்ந்து பாஜ எம்பி நிஷிகாந்த் மற்றும் அவரது மனைவி மீது ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக