வெள்ளி, 25 ஏப்ரல், 2014

117 முறை பெண்ணை தாக்கிய இந்திய வம்சாவளி Millionaire தண்டனையிலிருந்து தப்பினார்


A multi-millionaire tech-entrepreneur, who was once named one of America’s ‘most eligible bachelors’, has avoided jail time despite allegedly beating and kicking his girlfriend 117 times in a 30 minute attack.
Gurbaksh Chahal, 31, was charged with 45 felony counts over the incident, which took place in his San Francisco apartment in August last year.
Police obtained CCTV which allegedly show Chahal, who ironically describes himself as ‘die hard’, kicking his then-partner in the head multiple times and attempting to smother her.அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் இளம்பெண்ணை 117 முறை தாக்கிய அவரது நண்பரான இந்திய வம்சாவளியை சேர்ந்த குர்பக்ஸ் சாகல் என்பவர் தண்டனையிலிருந்து தப்பினார். அப்பெண்ணை அவரது வீட்டிற்குள்ளேயே வைத்து அரை மணி நேரத்தில் 117 முறை சாகல் தாக்கியது அங்குள்ள வீடியோவில் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள லாஸ் வேகாஸ் நகருக்கு அப்பெண் ஒரு முறை சென்றபோது வேறொரு ஆணுடன் உறவு கொண்டதுடன் தனக்கு துரோகம் செய்துவிட்டதை தான் தெரிந்து கொண்டதாக கூறியே அவளை சாகல் தாக்கியுள்ளார். அதோடு நில்லாமல் உன்னை கொல்ல போகிறேன் என்று நான்கு முறை அப்பெண்ணை பார்த்து கூறியுள்ளார். இத்தாக்குதலில் நிலை குலைந்த அப்பெண் அவசர உதவி கேட்டு அழைக்கும் 911 என்ற எண்ணை அழைத்து தன்னால் மூச்சு விடமுடியவில்லை என்று கூறியிருக்கிறார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளனர். இது வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வந்த அந்நாட்டு நிதிமன்றம் சாகலுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அவருக்கு 3 வருட மனரீதியான பயிற்சி அளிக்கவும், 52 வாரங்களுக்கு உள்நாட்டு வன்முறை குறித்த பயிற்சி வழங்கவும் உத்தரவிட்டதுடன், சாகலை 25 மணி நேர சமூக சேவை செய்யுமாறும் உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக