மதுரை: கலைஞர் திமுக, ஆதரவாளர்களுடன் சந்திப்பு, ரஜினிகாந்த்,
மன்மோகன் சிங், ராஜ்நாத் சிங், வைகோ சந்திப்பு என அடுத்தடுத்து
அதிரிபுதிரியாக மு.க.அழகிரி செயல்பட்டு வந்தாலும் இப்போதைக்கு அவர் புதிய
கட்சி தொடங்கும் மூடிலேயே இல்லை என்று உள் வட்டாரத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அவர் தேரத்ல் முடிவு வரும் வரை காத்திருப்பது உறுதி. காரணம், திமுக
வேட்பாளர்களை முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின்தான் தேர்வு செய்துள்ளார்.
அதில் பல குழப்பங்கள், தவறுகள், சலசலப்புகள் உள்ளதாக அழகிரி திடமாக
நம்புகிறார்.குறிப்பாக தென் மாவட்ட வேட்பாளர்கள் யாருமே வெல்ல மாட்டார்கள் என்று
திட்டவட்டமாக கூறி வருகிறாராம் அழகிரி. இதற்கு முன்பு வரை திமுக ஆட்சியில்
இருந்தபோது நடந்த இடைத் தேர்தல்களில் 90 சதவீத வேட்பாளர்கள் அழகிரியின்
திட்டத்தை வைத்துத்தான் வென்றார்கள்.
ஆனால் ஸ்டாலினால் அப்படியெல்லாம் திட்டம் போட முடியாது. அவரது பிரசாரம்
எடுபடாது, ஜெயலலிதாவுக்கு முன்பு ஸ்டாலினால் தாக்குப் பிடிக்க முடியாது.
மேலும் தேமுதிக, பாஜக கூட்டணி வேறு வாக்குகளைப் பிரிக்கும். எனவே
திமுகவுக்கு நிச்சய் பெரும் தோல்வி நிச்சயம் என்ற நம்பிக்கையில்
இருக்கிறாராம் அழகிரி.
எனவே தேர்தல் முடிவுக்குப் பின்னர் பாரீர், ஸ்டாலின் தலைமையில் திமுகவுக்கு
ஏற்பட்ட கதியைப் பாரீர். அதுவே நான் பணியாற்றிய இடைத் தேர்தல்களில் ஒரு
தோல்வி கூட கிடைக்காமல் வெல்ல வைத்தேனே என்று கூறி மீண்டும் பழைய
செல்வாக்குடன் திமுகவுக்குள் நுழையவே அவர் முயற்சிக்கக் காத்திருக்கிறார்
என்கிறார்கள்
அதேசமயம், தென் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் அத்தன பேரையும் தோற்கடிக்க
தீவிரமாக வேலை செய்யப் போகிறாராம் அழகிரி. அதற்குத்தான் தற்போது பல
மும்முரமான வேலைகளில் அவர் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
இதை எப்படிச் செய்வது என்பது குறித்துத்தான் தற்போது திட்டமிடுகிறார்,
ஆலோசனை நடத்துகிறார் என்கிறார்கள்.
அழகிரி குறித்து அதிகம் தெரிந்தவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை- அழகிரியைக்
கணிக்க முடியாது.
tamil.oneindia.i சிக் யாரும் இலகுவில்
tamil.oneindia.i சிக் யாரும் இலகுவில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக