வியாழன், 20 மார்ச், 2014

TRS சந்திரசேகரராவ் :.சீமாந்த்ராவுக்கு சொட்டு தண்ணீர் தரமாட்டோம் ! அரசு அலுவலகங்களில் வேலை செய்யவிடமாட்டோம் சீமாந்த்ரா போகவேண்டியதுதான்

சீமாந்திராவுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க மாட்டோம்: சந்திரசேகரராவ்
ஆந்திர பாராளுமன்றம், சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. தெலுங்கானாவில் வருகிற 30–ந் தேதியும், சீமாந்திராவில் ஏப்ரல் 7–ந் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 16–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன் பின் மாநில பிரிவினை முறையாக அறிவிக்கப்படும் ஜுன் 1–ந் தேதி தெலுங்கானா உதயமாகும் என்று உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி தெரிவித்தார். இதற்கிடையே தெலுங்கானா உதயமானதும் சீமாந்திராவுக்கு எங்கள் நீர்த்தேக்கத்தில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி தலைவர் சந்திரசேகரராவ் மிரட்டி உள்ளார்.> ஜதராபாத்தில் நேற்று தெலுங்குதேசம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி சந்திரசேகரராவ் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்கள். அவர்கள் மத்தியில் சந்திரசேகரராவ் பேசியபோது,  ’’தெலுங்கானா மாநிலம் உதயமானதும் இங்குள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட சீமாந்திராவுக்கு தர மாட்டோம். எங்கள் தேவை போக எஞ்சிய தண்ணீரைத் தான் விடுவிப்போம். இப்படியே போனால் சீக்கிரம் இன்னொரு சோமாலியா போல ஆக்கிடுவேல !  உன்னைய நம்பின தெலுங்கனுக்கு நீ சரியான ஆப்பு தான் அடிக்கற ,ஆனா அது புரியாம உன்னைய வரலாற்று புருஷன் ரேஞ்சுக்கு காவடி எடுக்கிராகல.ரொம்பதான் துள்ளாதீக சீக்கிரம் அல்லாரும் அல்லாட போரீக!

மேலும் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள்தான் இங்குள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்ற முடியும். சீமாந்திராவை சேர்ந்தவர்கள் அங்கு சென்று விட வேண்டியதுதான்.  கம்மம் மாவட்டத்தில் உள்ள 7 மண்டலங்கள் சீமாந்திராவுடன் இணைக்கவிட மாட்டோம்’’என்று தெரிவித்தார் nakkheeran.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக