வெள்ளி, 14 மார்ச், 2014

காங் அப்செட் ! TRS BJP பேச்சுவார்த்தை ! TRS angry because of Vijayasanthi merged with congress. ..

புதுடில்லி: தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு முக்கிய காரணியான டி.ஆர்.எஸ் கட்சி பா.ஜ., உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
தெலுங்கானா மாநிலம் உருவானால் டி.ஆர்,.எஸ் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் உடன் இணைவதாக சந்திரசேகரராவ் தெரிவித்திருந்தார். ஆனால் டி.ஆர். எஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் காங்., உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், அதே நேரம் காங்., உடன் கூட்டணி வைத்து கொள்ள டி.ஆர்.. எஸ். கட்சியினர் சம்மதம் தெரிவித்தனர்.
வரும் பொது தேர்தலுடன் சேர்த்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. புதிய மாநிலத்தில் உள்ள லோக்சபா தொகுதி மற்றும் சட்டசபை தொகுதி யில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இருகட்சியினரும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று வருகின்றனர்.  கூடுதல சீட் வாங்கதான் ஜஸ்ட் டிராமா ?  

இந்நிலையில் டி.ஆர்.எஸ் .கட்சி பா.ஜ., வுடன் கூட்டணி அமைக்க கதவுகளை திறந்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு பா.ஜ., உதவியதன் பிரதிபலனாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தை என டி.ஆர்.எஸ். தெரிவித்துள்ளது. இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு மிகப்பெரிய அடியாக கருதப்படு்கிறது.
ஆந்திர மாநிலத்தி்ன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திக்விஜய்சிங் மூன்று நாட்கள் பயணமாக லோக்சபா, சட்டசபைக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக ஐதராபாத் வந்துள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக